[ad_1] வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த ‘மச்சா டீ’ எப்படி உதவுகிறது?

Jun 5, 2024

வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த ‘மச்சா டீ’ எப்படி உதவுகிறது?

mukesh M

மச்சா டீ!

கமேலியா சினன்சிஸ் என்ற தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் டீ வகை உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அதிகம் பருகும் ஒரு டீ ஆகும். இந்நிலையில் இந்த டீ, வாய் வழி ஆரோக்கியம் காக்க எப்படி உதவுகிறது என இங்கு காணலாம்!

Image Source: pexels-com

ஈறுகள் ஆரோக்கியம் காக்கும்!

உங்கள் ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க மச்சா டீ பெரிதும் உதவுகிறது. அதே போல ஈறுகளில் ஏற்படும் இரத்தப்போக்கை குறைத்து ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த மச்சா டீ குடித்து வரலாம்.

Image Source: istock

பல் சொத்தை?

தினசரி மச்சா டீ குடித்து வர பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். இது பல் சொத்தை வளர்ச்சியும் மற்றும் சொத்தை பரவுதலை குறைக்கும் ஆற்றலை கொண்டுள்ளது.

Image Source: istock

வாய் துர்நாற்றம் தடுக்கும்!

ஒரு சிலருக்கு அடிக்கடி வாய் துர்நாற்ற பிரச்சனைகள் ஏற்படும். இந்த நிலையில் தினசரி மச்சா டீ குடித்து வந்தால் நாளடைவில் வாய் துர்நாற்றம் குணமாகும்.

Image Source: istock

வாய்வழி புற்றுநோய்?

மச்சா டீ-யில் அழர்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் வாய்வழிப் புற்று நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள பாலி பினால்கள் புற்றுநோய் உண்டாவதன் வாய்ப்பை குறைக்கிறது.

Image Source: istock

மன ஆரோக்கியம்

தினசரி மச்சா டீ குடித்து வந்தால் பற்களுக்கு மட்டுமல்லாமல் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும். ஏனெனில் இதில் காப்பின் அளவு குறைவாக இருப்பதால் மன அழுத்த பிரச்சனைகளை குணப்படுத்தும்.

Image Source: istock

எடை குறையும்

உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் டீ, காபி போன்ற காஃபின் பானங்களை தவிர்த்து இந்த மச்சா டீ குடித்து வரலாம். இது உங்கள் உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து ஆரோக்கிய உடல் எடை இழப்புக்கு உதவும்.

Image Source: istock

இதய ஆரோக்கியம் காக்கும்!

இந்த மச்சா டீயில் உள்ள கேடசன் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. மாரடைப்பு பக்கவாதம் போன்ற இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்க தினசரி மச்சா டீ குடித்து வரலாம்.

Image Source: istock

மூட்டு வலி குணமாகும்!

மச்சா டீயில் உள்ள அழர்சி எதிர்ப்பு பண்புகள் நம் உடலில் ஏற்படும் மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்க உதவுகிறது. மேலும் இந்த மச்சா டீயில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளும் நிறைந்துள்ளது.

Image Source: istock

Thanks For Reading!

Next: தினமும் கொள்ளு சாப்பிடுவது நல்லதா? இதன் நன்மை - தீமை என்ன?

[ad_2]