[ad_1] 'வாரிசு' படத்தில் வரும் 'கும்பே நீர்வீழ்ச்சி' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Jul 18, 2024

'வாரிசு' படத்தில் வரும் 'கும்பே நீர்வீழ்ச்சி' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

Anoj, Samayam Tamil

கும்பே நீர்வீழ்ச்சி

2023ல் வெளியான வாரிசு படத்தில் நடிகர் விஜய் இந்த அருவிக்கு செல்வது போல் பாடல் காட்சி எடுக்கப்பட்டிருக்கும். இந்த அருவி எங்கு இருக்கிறது? அதனை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com

எங்கு இருக்கிறது

கும்பே அருவி, மகாராஷ்டிரா மாநிலம் ரய்காட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 178 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டும் காட்சிகள் சுற்றுலா வாசிகளை மயக்கக்கூடும். இந்த நீர்வீழ்ச்சி மூன்று பக்கங்களிலும் மலைகளால் சூழப்பட்டுள்ளது

Image Source: instagram-com/traveller_td

ட்ரெக்கிங் அனுபவம்

சுமார் 10 நிமிட நடைப்பயணத்தில் இந்த அருவியை எளிதில் அடைந்து விடலாம். அதேநேரம், அருவியின் மற்றொரு வியூ பாயிண்ட் அடைவதற்கு ட்ரெக்கிங் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். அவை எளிதாகவும் இருக்காது. ஆனால், இறுதியில் அருவியின் சிறந்த காட்சியை காணலாம்

Image Source: instagram-com/swapneil_7

பிக்னிக் ஸ்பாட்

வார இறுதியில் குடும்பத்துடன் பிக்னிக் செல்ல விரும்பினால், கும்பே அருவிக்கு வரலாம். இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அமைதியான காலநிலையில் நேரத்தை செலவிட சிறந்த வழியாகும். உள்ளூர் மக்களின் ஃபேவரைட் அவுட்டிங் ஸ்பாட்டாகும்

Image Source: instagram-com/trek_nation_

முகாமிட்டு தங்குவது

இந்த நீர்வீழ்ச்சி அருகே நண்பர்களுடன் முகாமிட்டு தங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது. நட்சத்திரங்களை கண்டு ரசித்தப்படி மனதிற்கு பிடித்தவர்களுடன் நேரத்தை செலவிட செய்யாலம். இங்கு தங்குவது பற்றி முன்கூட்டியே அதிகாரிகளுடன் ஆலோசித்து கொள்ளுங்கள்

Image Source: instagram-com/swapneil_7

எப்படி செல்வது?

கும்பே அருவிக்கு சொந்த வாகனங்களில் சாலை வாயிலாக செல்வது சிறந்த முடிவாகும். நீங்கள் ரயிலில் செல்லும் பட்சத்தில், Mangaon ரயில் நிலையத்தில் இருந்து 23 கி.மீ தொலைவில் கும்பே அருவி உள்ளது

Image Source: instagram-com/dipshii__

சிறந்த நேரம் எது?

கும்பே அருவிக்கு செல்ல மழைக்காலம் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. அச்சமயத்தில் அருவியில் நீர்வரத்தும் அதிகமாக இருக்கக்கூடும்.

Image Source: instagram-com/rajputavdhesh

அருகிலுள்ள சுற்றுலா தளங்கள்

கும்பே நீர்வீழ்ச்சிக்கு அருகில் தேவ்குந்த் நீர்வீழ்ச்சி, ராய்காட் கோட்டை, மங்காட் கோட்டை, தம்ஹினி காட் போன்ற முக்கியமான சுற்றுலா தளங்கள் ஏராளம் உள்ளன

Image Source: instagram-com/wanderer_patil

அலட்சியம் வேண்டாம்!

கும்பே அருவியில் ஆபத்துகளும் நிறைந்திருக்கின. ஓரத்தில் நிற்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இந்த அருவிக்கு சுற்றுலா சென்ற அன்வி காம்தர் எனும் இளம்பெண், ரீல்ஸ் வீடியோ எடுக்கையில் 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது

Image Source: instagram-com/rajputavdhesh

Thanks For Reading!

Next: கேரளாவில் கட்டாயம் செல்ல வேண்டிய 'அக்குளம் சுற்றுலா கிராமம்'

[ad_2]