Jul 27, 2024
BY: Anoj, Samayam Tamilபஞ்சாப்பை பூர்விகமாக கொண்ட பர்பி, அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு உணவாகும். இந்தப் பதிவில், நாவில் வைத்ததும் கரையும் வாழைப்பழ பர்பியை எப்படி செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
பழுத்த வாழைப்பழம் - 3; வெல்லம் - 100 கிராம்; நெய் - தேவையான அளவு; கோதுமை மாவு - 150 கிராம்; ஏலக்காய் தூள் - 2 டீஸ்பூன்; பொடித்த பாதாம் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் வாழைப்பழத்தை தோலுரிக்க வேண்டும். அதனை இரண்டாக கட் செய்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துகொள்ளவும்
Image Source: pexels-com
அடுப்பில் அகலமான பாத்திரத்தை வைத்து வெல்லத்தை சேர்க்க வேண்டும். அதில் தண்ணீரை ஊற்றி வெல்லம் கரையும் அளவிற்கு தொடர்ச்சியாக கிளற வேண்டும்
Image Source: istock
இதற்கிடையில், மற்றொரு கடாயில் நெய் ஊற்றி ஊருகியதும் கோதுமை மாவு சேர்த்து கிளற வேண்டும்
Image Source: istock
பிறகு, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள வாழைப்பழ கலவையை சேர்க்க வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் நன்றாக கிளற வேண்டும்
Image Source: istock
அடுத்து, வடிகட்டிய வெல்ல நீர் மற்றும் ஏலக்காய் தூளை சேர்க்க வேண்டும். கலவை கெட்டியாகும் வரை தொடர்ச்சியாக கிளற வேண்டும்
Image Source: istock
இந்த கலவையை அகலமான தட்டில் ஊற்றி, அதன் மீது பொடித்த பாதாமை தூவ வேண்டும்
Image Source: istock
இறுதியாக, உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும். அவ்வுளவு தான், ருசியான வாழைப்பழ பர்பி ரெடியாகிவிட்டது. இதை அனைவருக்கும் சாப்பிட கொடுக்கலாம்
Image Source: istock
Thanks For Reading!