[ad_1] வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய உலகின் ‘மிகப்பெரிய தீவுகள்’!

May 4, 2024

வாழ்வில் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய உலகின் ‘மிகப்பெரிய தீவுகள்’!

mukesh M

மிகப்பெரிய தீவுகள்!

நம் வாழ்வில் ஒமுறையேனும் பார்க்க வேண்டிய உலகின் மிகப்பெரிய தீவுகள் சிலவற்றை பற்றி இங்கு நாம் காணலாம்.

Image Source: pexels-com

கிரீன்லாந்து!

சுமார் 2,130,800 sq km பரப்பளவு கொண்ட கிரீன்லாந்து உலகின் மிகப்பெரிய தீவாக உள்ளது. அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் உள்ள இந்த தீவு - சாகச பிரியர்களுக்கு ஏற்ற இடம் ஆகும்.

Image Source: unsplash-com

நியூ கினி!

சுமார் 786,000 sq km பரப்பளவு கொண்ட இந்த தீவு ஆனது உலகின் இரண்டாவது பெரிய தீவாக உள்ளது. இத்தீவின் இரண்டு பக்கமும் உள்ள இயற்கை அமைப்பு, கடல் சார்ந்த சாகச விளையாட்டுகளை விளையாட ஏற்ற இடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: unsplash-com

போர்னியோ!

உலகின் மூன்றாவது பெரிய தீவாகவும், ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய தீவாகவும் இருக்கும் போர்னியோ ஆனது இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய மூன்று நாடுகளின் ஆளுமையில் உள்ள (உலகின் ஒரே) தீவு ஆகும்!

Image Source: unsplash-com

மடகாசுகர்!

ஆப்பிரிக்கா கண்டத்தின் தென்கிழக்கே இந்திய பெருங்கடலிலுள்ள ஒரு அழகிய தீவாக இந்த மடகாசுகர் பார்க்கப்படுகிறது. அரிய வகை உயிரினங்கள் பலவற்றுக்கு தாயகமாக இருக்கும் இந்த மடகாசுகர், சாகச பயணத்திற்கு ஏற்ற இடம்!

Image Source: unsplash-com

பாஃபின் தீவு!

கனடாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் இந்த பாஃபின் தீவு ஆனது உலகின் 5வது பெரிய தீவாகவும், கனடாவின் மிகப்பெரிய தீவாகவும் உள்ளது. மேலும், அரிய வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு பெயர் பெற்ற ஒரு இடமாகவும் இது உள்ளது.

Image Source: unsplash-com

சுமத்திரா தீவு!

சுமார் 470000 sq km பரப்பளவு கொண்ட இந்த அழகிய தீவு ஆனது இந்தோனேசியாவில் அமைந்துள்ளது. 45 மில்லியல் மக்கள் வசிக்கும் இந்த இடத்தில், அரிய வகை யானைகள், காண்டாமிருகம் மற்றும் பல உயிரினங்களை காண முடியும் என்பது சிறப்பு!

Image Source: unsplash-com

ஒன்சு தீவு!

ஜப்பான் நாட்டில் அமைந்திருக்கும் இந்த அழகிய தீவு, ஜப்பானியர்களின் பிரதான நிலப்பகுதியாக கருதப்படுகிறது. குறிப்பாக, ஒசாக்கா, கியோட்டோ, ஹிரோசிமா உள்ளிட்ட நகரங்களின் பிறப்பிடமாகவும் இது அறியப்படுகிறது

Image Source: unsplash-com

விக்டோரியா தீவு!

கனடா நாட்டிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் இந்த விக்டோரியா தீவு ஆனது பரப்பளவில் உலகின் 8-வது பெரிய தீவாக அறியப்படுகிறது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: 'ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா'-வில் அப்படி என்னதான் இருக்கிறது?

[ad_2]