மரங்கள் என்றாலே பச்சை நிறத்தில் பூக்கள், காய்கள், பழங்கள் என்பதை தாண்டி ஒருசில மரங்கள் தங்கள் தோற்றத்திலும், நிறத்திலும் மாறுபட்டு காணப்படுகிறது. அது குறித்து தான் நாம் இப்பதிவில் பார்க்க போகிறோம்.
Image Source: pixabay
வாக்கிங் பாம் ட்ரீ
வாக்கிங் பாம் ட்ரீ என்னும் வகையினை சேர்ந்த மரம் காஸ்போனேர் என்றும் அழைக்கப்படுகிறது. தோற்றத்தில் சிறியதாக காணப்படும் இந்த வகை மரம் வருடத்திற்கு சுமார் 20 மீட்டர் தூரம் வரை இடம் விட்டு இடம் நகர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
பாபாப் மரங்கள்
அடான்சோனியா என்னும் பாபாப் மரங்கள் தலைகீழான தோற்றம் கொண்டதாகும். ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் காணப்படும் இம்மரங்களின் கிளைகள் வேர் போல் காட்சியளிக்கிறது.
Image Source: pixabay
டிராகனின் ரத்த மரம்
ஏமன், சோகோத்ரா என்னும் தீவில் காணப்படும் இந்த மரம் தடிமனான தண்டுகள் கொண்டு குடையை போல் மேல் நோக்கி காணப்படும். அதாவது குடை போன்ற தோற்றத்தில் இருக்குமாம்.
Image Source: istock
பட்டு பருத்தி மரம்
கபோக் அல்லது சீபா என்று அழைக்கப்படும் இந்த பட்டு பருத்தி மரம் வெப்ப மண்டல பகுதியில் காணப்படும் இலையுதிர் மரங்கள், இவை 164 முதல் 230 அடி உயரத்தினை கொண்டுள்ளது.
Image Source: pixabay
ஜபுதிகாபா
ஜபுதிகாபா என்னும் பிரசிலிய திராட்சை மரம் மிகவும் மெதுவாக வளரக்கூடிய மரமாகும். இந்த மரத்தின் தண்டுகளில் கருப்பு, ஊதா, வெள்ளை போன்ற நிறங்களில் பழங்கள் காணப்படும்.
Image Source: istock
ஹைபரியன்
அமெரிக்கா-கலிபோர்னியாவின் ரெட் வுட் தேசிய பூங்காவில் அமைந்துள்ள கடலோர மரம் தான் இது. இந்த மரம் 380.3 அடி உயரம் கொண்ட உலகின் மிக உயரமான மரமாக கருதப்படுகிறது.
Image Source: istock
ரெயின்போ யூக்கலிப்டஸ்
காகித உற்பத்திக்காக பயிரிடப்படும் இந்த ரெயின்போ யூக்கலிப்டஸ் மரங்களின் பட்டை பச்சை, நீலம், பழுப்பு, ஊதா, ஆரஞ்சு உள்ளிட்ட பல வண்ணங்களில் காணப்படும். இம்மரம் குறிப்பாக பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் காணப்படுகிறது.
Image Source: istock
குயவர் மரம்
தென் ஆப்பிரிக்கா மற்றும் நமீபியா போன்ற பகுதிகளில் காணப்படும் இந்த மரம் கோக்கர் பூம் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றை நடுங்கும் மரங்கள் என்றும் கூறுகிறார்கள்.
Image Source: pexels
Thanks For Reading!
Next: இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள தலங்கள்!