Aug 9, 2024
BY: Anoj, Samayam Tamilசேமியா பாயாசம், பாசி பருப்பு பாயாசம், பால் பாயாசம் என பல வகையான பாயாசத்தை ருசிபார்த்துள்ள நிலையில், கொத்தவரங்காயை பயன்படுத்தி எப்படி பாயாசம் செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
கொத்தவரங்காய் - கால் கப்; நெய் - 2 டீஸ்பூன்; பயத்தம் பருப்பு - கால் கப்; காய்ச்சிய பால் - 1 கப்; ஏலக்காய் - 2; வெல்லம் - கால் கப்; முந்திரி, உலர் பழங்கள் - சிறிதளவு; துருவிய தேங்காய் - கால் கப்
Image Source: istock
முதலில் கடாயில் கால் கப் கோத்தவரங்காயை சேர்க்க வேண்டும். அடுத்து, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 5 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும்.
Image Source: istock
பிறகு, கொத்தவரங்காயை ஆறவிடவும். அதனை மிக்ஸி ஜாருக்கு மாற்றி பேஸ்டாக அரைத்து கொள்ளவும்
Image Source: istock
இப்போது அதே கடாயில் நெய் ஊற்றி உருகியதும் கொத்தமல்லி பேஸ்டை சேர்த்து நன்றாக வதக்கிகொள்ளவும்
Image Source: istock
இதற்கிடையில் பிரஷர் குக்கரில் கால் கப் பயத்தம் பருப்பை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். அதனை கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுமார் 3 விசில் வரும் வரை வைத்திருக்க வேண்டும்
Image Source: istock
இப்போது வேகவைத்த பருப்பை கொத்தவரங்காய் பேஸ்டில் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்க வேண்டும்
Image Source: istock
அடுத்து, 1 கப் காய்ச்சிய பால், ஏலக்காய், வெல்லம் சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்கவிடவும்
Image Source: pexels-com
இறுதியாக, நெய்யில் வறுத்த முந்திரி, உலர் திராட்சை மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து மிக்ஸ் செய்தால் சுவையான பாயாசம் ரெடி. இதை வீட்டில் இருப்போருக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்
Image Source: istock
Thanks For Reading!