விமான பயணத்திற்கான டிக்கெட் பொதுவாகவே விலை உயர்ந்தது என்றாலும் பலருக்கும் பிசினஸ் அல்லது முதல் வகுப்பில் பயணிக்கும் ஆசை இருக்கும். இந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் இலவசமாக ‘upgrade’ செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: pexels-com
தள்ளுபடி டீல்கள்!
வணிக விடுமுறை நாட்களில் விமான நிறுவனங்கள் தங்கள் வணிக வகுப்பு இருக்கைகளை நிரப்ப தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளை விற்கும். எனவே விமான நிறுவனங்களின் செய்தி மடல்களை வழக்கமாகப் படியுங்கள்.
Image Source: istock
லாயல்டி திட்டங்கள்!
பெரும்பாலான விமான நிறுவனங்கள் லாயல்டி திட்டங்களை வழங்குகின்றன. இதில் சேர்ந்து மைல்களை சேகரிப்பதன் மூலம் இலவச தர உயர்வு பெறலாம்.
Image Source: istock
செக்-இன் போது கேளுங்கள்!
விமான நிலைய செக்-இன்னின் போது, இட வசதி இருந்தால், அப்கிரேட் கிடைக்குமா என்று மரியாதையுடன் விமான நிலைய ஊழியரிடம் விசாரித்துப் பாருங்கள்.
Image Source: istock
விசேஷ தருண அப்கிரேட்!
உங்கள் பிறந்தநாள் அல்லது திருமண நாட்கள் போன்ற சிறப்பு நாட்களில் பயணம் செய்யும்போது, செக்-இன்னில் அதை குறிப்பிடுங்கள். சில சமயங்களில் விமான நிறுவனங்கள் அவர்களுக்கு அப்கிரேட்களை வழங்கும்.
Image Source: istock
தனித்து பயணியுங்கள்!
இருவர் அல்லது கூட்டமாகப் பயணிப்பவர்களை விடத் தனித்துப் பயணிப்பவர்களுக்கே இலவச டிக்கெட் அப்கிரேட் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
Image Source: istock
கடைசி நிமிட முன்பதிவு!
விமானங்களில் ஓவர்புக்கிங் பிரச்சனை ஏற்படும் போது அடுத்த விமானத்திற்குப் பயணிக்க ஒப்புக்கொள்பவர்களுக்கு அவர்களுக்கான தீர்வை வழங்கியதற்கான வெகுமதியாக இலவச அப்கிரேடுகள் வழங்கப்படும்.
Image Source: istock
புகார் தெரிவித்தல்
விமான பயணத்தின் போது எதிர்கொள்ளும் தொந்தரவுகள் அல்லது பிரச்சனைகள் குறித்து புகார் செய்பவர்களுக்கு வேறு எந்த தீர்வும் இல்லாத பச்சத்தில் இலவச அப்கிரேடுகள் வழங்கப்படும்.
Image Source: istock
கிரெடிட் கார்ட் சலுகைகள்!
விமான நிறுவனங்களுடன் இணைந்த கிரெடிட் கார்ட்களை உபயோகிப்பதன் மூலம் சலுகையாக இலவச டிக்கெட் அப்கிரேட்கள் கிரெடிட் கார்ட் நிறுவனத்தால் வழங்கப்படும்.
Image Source: istock
Thanks For Reading!
Next: ஷாப்பிங் பிரியரா நீங்கள்? இதோ உலகின் மலிவு விலை சந்தைகளின் பட்டியல்!