Jul 6, 2024
By: mukesh Mசர்வதேச விமானங்களில் பயணிகளுக்கு மதுபானம் அளிக்கப்படுவது வழக்கமாக இருக்கும் நிலையில், இந்த விமானப் பயணத்தின் போது மது பானம் அருந்துவது நல்லதா? கெட்டதா? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி விமானப் பயணத்தின் போது மது அருந்துவது, குறைந்த காற்றழுத்தத்தின் விளைவாக இதயத்துடிப்பு அதிகரிக்க கூடும். இதன் விளைவாக எதிர்மறை விளைவுகளை பயணிகள் சந்திக்க கூடும்!
Image Source: istock
ஆக்ஸிஜன் ஓட்டம் குறைவாக இருக்கும் விமான பயணத்தின் போது மது பானம் பருகுவது இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவை பாதிக்கிறது. இதன் விளைவாக நீரிழப்பு உண்டாகி தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற எதிர்மறை விளைவுகள் உண்டாக கூடும்!
Image Source: istock
விமான பயணத்தின்போது மதுபானம் பருகுவதன் முக்கிய காரணம் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வது தான். இந்நிலையில் உங்கள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள, இந்த மது பானத்திற்கு மாற்றாய் வேறு என்ன பருகலாம்? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவும் இயற்கை பானமாக தண்ணீர் பார்க்கப்படுகிறது. மேலும், நம் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்களை அளிக்கும் இந்த தண்ணீரை பயணத்தின் போது எடுத்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
பயணங்களின் போது காஃபின் நிறைந்த பானங்களை தவிர்த்து, மிளகுகீரை, கெமோமில் தேநீர் போன்ற மூலிகை தேநீர்கள், பயணத்தின் போது மதுபானத்திற்கு மாற்றாக பருக ஏற்ற பானங்கள் ஆகும்.
Image Source: pexels-com
நம் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்களை அளிக்கும் ஒரு இயற்கை பானமாக இளநீர் பார்க்கப்படுகிறது. மேலும் நம் உடலில் உண்டாகும் நீரிழப்பை தடுத்து, முழுமையான ஆற்றலுடன் வைத்துக்கொள்ளும் ஒரு பானமாகவும் இது பார்க்கப்படுகிறது.
Image Source: istock
வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை பழத்தின் சாற்றினை பருகுவது, ஆற்றல் இழப்பை தடுப்பதோடு, நம் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து, விமானப் பயணத்தின் போது உண்டாகும் எதிர்மறை விளைவுகளை தடுக்கிறது.
Image Source: istock
செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள், சோடாக்கள், பால் பொருட்கள் மற்றும் எண்ணெய் பொருட்களை பயணத்தின்போது தவிர்ப்பது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!