[ad_1] வியக்கவைக்கும் கருப்பு மணல் கடற்கரைகள் - எங்கு உள்ளது தெரியுமா?

Aug 22, 2024

வியக்கவைக்கும் கருப்பு மணல் கடற்கரைகள் - எங்கு உள்ளது தெரியுமா?

mukesh M, Samayam Tamil

கருப்பு மணல் கடற்கரை!

கடற்கரை என்றாலே பலருக்கும் பிடிக்கும்; அதுவும் தனித்துவமான கருப்பு மணலுடன் இருந்தால்??... ஆம், பிரமிக்க வைக்கும் கருப்பு மணல் கடற்கரைகள் உலகம் முழுவதும் சுமார் 13 உள்ளன. அவற்றுல் சில குறித்து இங்கு காணலாம்!

Image Source: pexels-com

பெரிவோலோஸ் கடற்கரை!

எரிமலை சாண்டோரினி பளபளக்கும் கருப்பு மணல் கடற்கரைகளால் சூழப்பட்டுள்ளது, ஆனால் பிறை வடிவ தீவின் தெற்கில் உள்ள பெரிவோலோஸ் மிக நீளமானது. இங்கு ஓலைக் குடைகள், நீர் விளையாட்டுகள் மற்றும் மதிய உணவிற்கு கடல் உணவு விற்கும் பல உணவகங்கள் உள்ளன.

Image Source: instagram-com

தஹாரு கடற்கரை!

பாபீட்க்கு தென்கிழக்கே 25 மைல் தொலைவில், பாப்ராவில், தஹார் கடற்கரை உள்ளது. ஜெட் கருப்பு மணல்,மற்றும் ஆழமான நீல கடல் இந்த தளத்தின் அழகு என்று கூறலாம்.

Image Source: instagram-com

ரெய்னிஸ்ஃப்ஜாரா கடற்கரை, ஐஸ்லாந்து!

ரெய்னிஸ்ஃப்ஜாராவில், பாசால்ட் கடல் அடுக்குகள், மந்திரவாதிகளின் தொப்பிகள் கடலுக்கு வெளியே உள்ளன. இங்கு கப்பலை கரைக்கு இழுக்கும்போது பூதங்கள் கல்லாக மாறியதாக உள்ளூர் புராணங்களில் நம்பப்படுகிறது.

Image Source: instagram-com

பிளாயா ஜார்டின்!

இது 1990-களில் புகழ்பெற்ற ஸ்பானிஷ் கட்டிடக் கலைஞர் சீசர் மன்ரிக் என்பவரால் வடிவமைக்கப்பட்ட டெனெர்ஃப்பில் உள்ள நகர்ப்புற கருப்பு மணல் கடற்கரை. இந்த கடற்கரை உண்மையில் செயற்கையானது ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியாது!

Image Source: instagram-com

புனாலு கடற்கரை, ஹவாய்!

ஹவாய் பிக் தீவின் தென்கிழக்கு கடற்கரையை ஒட்டிய புனலு ஹவாயின் மிகவும் குறிப்பிடத்தக்க கருப்பு மணல் கடற்கரைகளில் ஒன்றாகும். இங்கு நீரோட்டங்கள் வலுவாக இருக்கும் என்பதால், நீச்சல் உள்ளிட்ட நீர் விளையாட்டுகள் கஷ்டம்!

Image Source: instagram-com

மெரோ கடற்கரை, டொமினிகா!

டொமினிகா தீவின் தலைநகரான ரோசோவில் இருந்து அரை மணிநேர தூரத்தில் உள்ள மெரோ கடற்கரை ஒரு கருப்பு மணல் கடற்கரை ஆகும். வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஏற்ற ஒரு இடம்!

Image Source: instagram-com

செங்கிகி கடற்கரை!

லோம்போக்கின் வடமேற்குக் கரையோர மலைப் பகுதியில் அமைந்துள்ள செங்கிகி என்பது கருப்பு மணலின் பிரபலமான கடற்கரை ஆகும். இது தொலைவில் இருக்கும் ரிஞ்சானி மலையின் பல வெடிப்புகளின் விளைவாகும்.

Image Source: instagram-com

மிஹோ-நோ-மட்சுபரா!

மிஹோ-நோ-மட்சுபரா கடற்கரை சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மயக்கும் காட்சி. இங்கு 54,000க்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட அடர்ந்த பைன் காடு, நான்கு மைல் நீளமுள்ள ஜெட் கருப்பு மணல் கடற்கரையில் அமைந்துள்ளது.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: என்ன? இந்த தீவுக்கு சுற்றுலா செல்ல விசா தேவையில்லையா?

[ad_2]