[ad_1] வியக்க வைக்கும் ஹலீம் விதைகளின் நன்மைகளும் ஊட்டச்சத்துகளும்!

Jun 17, 2024

வியக்க வைக்கும் ஹலீம் விதைகளின் நன்மைகளும் ஊட்டச்சத்துகளும்!

mukesh M

ஹலீம் விதை!

ஹலிம் விதைகளில் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. ஒரு நாளைக்கு நமது உடலுக்கு தேவையான 60% இரும்பு சத்து தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

Image Source: istock

ஊட்டச்சத்து நன்மைகள்!

ஹலீம் விதைகளில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட்கள் போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்து நன்மைகள் நிறைந்துள்ளன.

Image Source: istock

புற்றுநோயை தடுக்க உதவுகிறது!

ஹலீம் விதைகளில் உள்ள ஆர்கனோ-சல்பர் கலவை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது.

Image Source: pexels-com

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது!

இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் இதயம் சார்ந்த நோய் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்க உதவுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. மேலும் இரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைக்கவும் இது உதவுகிறது.

Image Source: istock

சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது!

சரும பிரச்சனைகளை சரி செய்ய இந்த ஹலீம் விதைகள் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் சருமங்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

Image Source: istock

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது!

ஹலீம் விதைகளில் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் புரதங்கள் நிறைந்துள்ளதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. இதனால் நோய் தொற்றுகள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

Image Source: istock

குடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது!

ஹலீம் விதைகள் மலமிளக்கியாக செயல்படுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை தடுக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. இது குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது.

Image Source: istock

இரும்பு சத்து!

நமது உடலில் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த இரும்பு சத்து உதவுகிறது. ஹலீம் விதைகளில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால் நமது ரத்தத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் உறிஞ்ச இது உதவுகிறது.

Image Source: istock

எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது!

ஹலீம் விதைகளில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த இது உதவுகிறது. எலும்பு முறிவு போன்றவற்றை குணப்படுத்த இந்த விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன.

Image Source: istock

Thanks For Reading!

Next: முருங்கை பூ பால் செய்வது எப்படி ? - அதன் மருத்துவ பயன்கள்

[ad_2]