May 14, 2024
கோடை காலத்தில் நம் சுற்றுப்புற வெப்பநிலை மிகவும் அதிகமாக இருக்கும். அதிக வெளிப்புற வெப்பநிலை காரணமாக உடல் வெப்பநிலையை சமநிலை செய்ய உடலானது வியர்க்க ஆரம்பிக்கும். இதனை தெர்மோர்குலேஷன் என்று கூறுவர்.
Image Source: istock
உடல் வெப்பநிலையை பராமரிக்க வியர்வை முக்கியமானது. இது உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது. இதன் மூலம் பொலிவான சருமத்தை பெறலாம்.
Image Source: istock
வியர்ப்பதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகமாகும். நச்சுக்களை வெளியேற்ற முடியும். சருமம் பொலிவாக இருக்க உதவுகிறது. வியர்வையில் டெர்ம்சிடின் பண்புகள் இருப்பதால் பாக்டீரியாக்களை அழிக்கிறது.
Image Source: istock
வியர்வை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிப்பதால் முகப்பருக்களை குறைக்கிறது. இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்டாக செயல்படுகிறது.
Image Source: pexels-com
வியர்வை உடம்பில் உள்ள உப்புக்கள் மற்றும் தண்ணீரை வெளியேற்றுகிறது. தேவையற்ற நச்சுக்களை நீக்குகிறது. சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. மாய்ஸ்சரைசர் ஆக செயல்படுகிறது.
Image Source: istock
சராசரியாக ஒரு நபர் உடற் செயல்பாடுகளின் போது ஒரு மணி நேரத்திற்கு 0.5 முதல் 2 லிட்டர் வரை வியர்க்க முடியும். இருப்பினும் அதிகப்படியான வியர்வை உங்களுக்கு நீரிழப்பு மற்றும் தொற்று நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது.
Image Source: istock
அதிகப்படியான வியர்வையால் உடம்பில் பூஞ்சை தொற்று ஏற்படலாம். இதனால் தோல் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
Image Source: istock
அளவுக்கு அதிகமாக வியர்க்கும் போது உங்கள் சரும துளைகள் அடைபட வாய்ப்பு உள்ளது. அழுக்குகள், தூசிகள் சரும துளைகளில் தேங்கி பருக்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
அதிகப்படியான வியர்வை செபொர்ஹெக் டெர்மடிடிஸ் அல்லது பொடுகுக்கு வழிவகுக்கும். இதனால் தோலில் ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் வாழ்ந்து செதில்களை உண்டாக்கி அரிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
Thanks For Reading!