[ad_1] விராட் கோலியால் முறியடிக்க முடியாத சச்சினின் 4 சாதனைகள்

விராட் கோலியால் முறியடிக்க முடியாத சச்சினின் 4 சாதனைகள்

Anoj, Samayam Tamil

Jul 23, 2024

விராட் கோலி vs சச்சின் டெண்டுல்கர்

விராட் கோலி vs சச்சின் டெண்டுல்கர்

கிரிக்கெட்டின் கடவுளாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், அவரது 24 ஆண்டு கிரிக்கெட் பயணத்தில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவற்றில் ரன் மிஷின் விராட் கோலி நினைத்தாலும் முறியடிக்க முடியாத சாதனைகளை பற்றி இங்கு பார்க்கலாம்

Image Source: x-com

200 டெஸ்ட் போட்டிகள்

சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில், இந்திய அணிக்காக முதன்முதலாக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார். அவரது மொத்த கேரியரில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

Image Source: pexels-com

விராட் கோலியால் முடியுமா?

சச்சினின் சில சாதனைகளை விராட் முறியடித்திருந்தாலும், இது கடினமான ஒன்றாகும். விராட் இதுவரை 113 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். சச்சின் சாதனையை முறியடிக்க இன்னும் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வேண்டும்

Image Source: x-com/icc

டெஸ்ட் ரன்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான ரன்கள் குவித்த சாதனையாளராக சச்சின் டெண்டுல்கர் திகழ்கிறார். அவரது டெஸ்ட் கேரியரில் மொத்தமாக 15,971 ரன்கள் எடுத்துள்ளார்

Image Source: x-com/loyalsachfan10

7000 ரன்கள் தேவை

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,848 ரன்கள் எடுத்துள்ளார். அவர் சச்சினின் சாதனையை முறியடிக்க இன்னமும் 7,074 ரன்கள் தேவைப்படுகிறது. கோலி ஓரிரு ஆண்டுகள் மட்டுமே விளையாடவுள்ளதால், ஆண்டிற்கு 2 ஆயிரம் ரன்களாவது எடுத்தாக வேண்டும்

Image Source: x-com/criccrazyjohns

ஒருநாள் கேரியர் சகாப்தம்

சச்சின் டெண்டுல்கர் 1989ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக முதலாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். அவரது மொத்த ஒருநாள் கேரியர் கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் மற்றும் 91 நாட்கள் ஆகும். இதனை கோலி முறியடிப்பது மிகவும் கடினமாகும்

Image Source: x-com/icc

நினைத்தாலும் முடியாது

கோலி 2008ம் ஆண்டு முதல் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறார். அவர் சச்சின் சாதனையை முறியடிக்க விரும்பினால், 2030ம் ஆண்டு வரை விளையாட வேண்டும்

Image Source: x-com/icc

ஒருநாள் உலக கோப்பை

சச்சின் டெண்டுலகர் 6 உலக கோப்பை தொடரில் விளையாடியுள்ளார். அதேபோல், உலக கோப்பையில் 2,000 ரன்களுக்கு மேல் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.

Image Source: x-com/icc

சமன் செய்வதே கடினம்

விராட் கோலி 2011 ஒருநாள் உலக கோப்பையில் தான் களமிறங்கினார். அவர் சச்சனின் சாதனையை சமன் செய்திட 2027 மற்றும் 2031 உலக கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும். இந்த சாதனையை முறியடிப்பது என்பது சாத்தியமற்றது ஆகும்

Image Source: x-com/icc

Thanks For Reading!

Next: Women's Asia Cup 2024-ல் இடம்பெற்ற அணிகளும் அதன் கேப்டன்களும்!

[ad_2]