[ad_1] விறைப்புத்தன்மை குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்து - மாத்திரைகள்?

விறைப்புத்தன்மை குறைபாட்டை ஏற்படுத்தும் மருந்து - மாத்திரைகள்?

Aug 7, 2024

By: mukesh M

விறைப்புத்தன்மை பிரச்சனை!

குழந்தையின்மை பிரச்சனையால் தவிக்கும் ஆண்கள் பலரும் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று விறைப்புத்தன்மை குறைபாடு. ஆண்கள் உட்கொள்ளும் ஒரு சில மருந்து - மாத்திரைகள் இந்த பிரச்சசனைக்கு வழிவகுக்ககும் என பரலாக நம்பப்படும் நிலையில், இதன் உண்மை நிலை என்ன? என்று இங்கு காணலாம்!

Image Source: istock

நிபுணர்கள் கூறுவது என்ன?

நிபுணர்கள் கூற்றுப்படி மன அழுத்தம், BP மற்றும் சில நாள்பட்ட நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் ஒரு சில மருந்துகள் விறைப்புத்தன்மை குறைபாட்டுக்கு மறைமுகமாக வழிவகுக்கலாம்.

Image Source: pexels-com

ஆல்கஹால் கொண்ட மருந்துகள்!

நாள்பட்ட நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் மட்டும் அல்ல, ஆல்கஹால் உள்ளடக்கம் கொண்ட சில போதை மாத்திரைகள், மருந்துகளும் இந்த விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு வழிவகுக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!

Image Source: istock

எப்படி பாதிக்கிறது?

மருத்துவர் பரிந்துறையின் படி எடுத்துக்கொள்ளும் இந்த குறிப்பிட்ட மருந்து - மாத்திரைகளின் அளவுக்கு மிகுதியான நுகர்வு ஆண்கள் உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் அளவை குறைக்க கூடும். இதன் விளைவாகவும் விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படக்கூடும்!

Image Source: istock

நரம்பு தளர்வுக்கு வழிவகுக்கிறது!

குறித்த இந்த ஒரு சில மருந்து, மாத்திரைகளின் தொடர்ச்சியான நுகர்வு ஆனது நரம்பு தளர்வு பிரச்சனைக்கு வழிவகுக்க கூடும். இதன் பின் விளைவாக விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்படக்கூடும்.

Image Source: istock

தடுப்பது எப்படி?

மருந்து - மாத்திரைகளின் பக்க விளைவால் உண்டாகும் இந்த விறைப்புத்தன்மை குறைப்பாட்டை போக்க மருத்துவரின் வழிகாட்டுதல் படி மருந்து - மாத்திரைகளின் பயன்பாட்டை குறைத்துக்கொள்வது நல்லது!

Image Source: istock

வாழ்க்கை முறை மாற்றங்கள்!

பொதுவாக இந்த மருந்து - மாத்திரைகளின் பக்க விளைவு ஆனது முறையற்ற வாழ்க்கை முறையுடன் இணையும் போது தீவிரமடைகிறது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடித்து இந்த பாலுறவு பிரச்சனையை தவிர்க்கவும்!

Image Source: istock

மது, புகையிலை தவிர்க்கவும்!

விறைப்புத்தன்மை பிரச்சனைக்கு மது, புகையிலை போன்ற போதை வஸ்துக்கள் ஒரு முக்கிய காரணமாக அமையும் நிலையில், குறிப்பிட்ட இந்த தீய பழக்கங்களை தவிர்ப்பது (அ) குறைத்துக்கொள்வது நல்லது!

Image Source: istock

உணவும் - உடற்பயிற்சியும்!

இதேப்போன்று ஆரோக்கியமான உணவு வழக்கம், தினசரி உடற்பயிற்சி மற்றும் போதுமான ஓய்வை உறுதி செய்வதன் மூலம் நாம் மருந்து - மாத்திரைகளால் ஏற்படும் நரம்பு தளர்வு மற்றும் விறைப்புத்தன்மை பிரச்சனைகளை சமாளிக்கலாம்!

Image Source: istock

Thanks For Reading!

Next: பெற்றோர் செய்யும் இந்த தவறு - குழந்தையின் ‘போலியோ’ நோய்க்கு காரணமாகலாம்!

[ad_2]