[ad_1] விறைப்புத்தன்மை பிரச்சனைக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பக்க விளைவு!

விறைப்புத்தன்மை பிரச்சனைக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பக்க விளைவு!

Aug 8, 2024

By: mukesh M

விறைப்புத்தன்மை குறைபாடு!

பாலுறவில் நாட்டம் இல்லா ஆண்கள் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று விறைப்புத்தன்மை குறைபாடு. இந்த விறைப்புத்தன்மை குறைப்பாட்டை போக்க எடுத்துக்கொள்ளும் ஒரு சில மருந்து - மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!

Image Source: istock

தலைவலி!

விறைப்புத்தன்மை குறைபாடு மாத்திரைகளின் நுகர்வு ஆனது நம் உடலில் திடீர் இரத்த ஓட்ட மாறுபாடுகளை உண்டாக்குகிறது. இரத்த ஓட்டத்தில் உண்டாகும் இந்த மாற்றம் பெரும்பான்மை மக்களுக்கு தலைவலி - தலைசுற்றல் உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்குகிறது!

Image Source: pexels-com

கீழ் - இடுப்பு வலி!

விறைப்புத்தன்மை குறைபாடு மாத்திரைகளின் நுகர்வு ஆனது ஒரு சிலருக்கு தசைகளின் வலுவிழப்புக்கு வழிவகுக்கிறது. இதன் காரணமாக தசைகளில் வலி (குறிப்பாக கீழ் இடுப்பு பகுதியில் வலி) உண்டாகிறது!

Image Source: istock

செரிமான பிரச்சனைகள்!

குறிப்பிட்ட இந்த மாத்திரைகளின் நுகர்வு ஆனது எதிர்பாரா செரிமான சிக்கல்களுக்கு வழிவகுக்க கூடும். அந்த வகையில் வயிற்று உப்புசம், வயிற்றுப்போக்கு போன்ற செரிமான அசௌகரிய நிலைகள் ஏற்பட கூடும்!

Image Source: istock

மயக்கம் ஏற்படலாம்!

நைட்ரிக் ஆக்சைடு அதிகரிப்பின் காரணமாக ஒரு சிலர் இந்த மயக்கம் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். விறைப்புத்தன்மை குறைபாடு மாத்திரைகளின் நுகர்வுக்கு பின் ஆற்றல் இழப்பு - மயக்கம் போன்ற உணர்வுகளை சந்தித்தால், உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது!

Image Source: istock

பார்வை கோளாறு பிரச்சனைகள்!

விறைப்புத்தன்மை குறைபாடு மாத்திரைகளின் நுகர்வு உங்கள் பார்வை கோணங்களை மாற்றியமைக்கலாம். இதன் விளைவாக மங்களான பார்வை / இரட்டை பார்வை போன்ற பிரச்சனைகள் எழக்கூடும்!

Image Source: istock

சரும சிவத்தல்!

விறைப்புத்தன்மை குறைபாடு மாத்திரைகளின் நுகர்வுக்கு பின் ஒரு சிலர் தங்கள் சருமத்தில் (முகம், கை, முதுகு பகுதிகளில்) சிவத்தலை சந்திக்கின்றனர். இது ஒரு தற்காலிக பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது!

Image Source: istock

சளி - நாசி எரிச்சல்!

விறைப்புத்தன்மை குறைபாடு மாத்திரைகளின் நுகர்வுக்கு பின் பலரும் இந்த சளி, மூக்கு ஒழுகுதல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இருப்பினும் இந்த பிரச்சனை ஒரு தற்காலிக பிரச்சனையே ஆகும்!

Image Source: istock

வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள்!

குறிப்பிட்ட இந்த பிரச்சனைகளை தவிர்த்து ஒரு சிலர் பார்வை இழப்பு, செவி கேளாமை போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்கின்றனர். குறிப்பிட்ட இந்த பிரச்சனையை எதிர்கொள்ளும் நபர்கள் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: எந்த வயதில் எந்த உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் தெரியுமா ?

[ad_2]