Aug 9, 2024
தங்களது சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்று பலரும் சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதன் பக்க விளைவு காரணமாக முகச்சுருக்கம் உள்ளிட்ட பிரச்சனை ஏற்படுகிறது. மேலும், தவறான பழக்க வழக்கங்கள் காரணமாகவும் இந்த முக சுருக்கம் ஏற்படுகிறது.
Image Source: istock
இப்போதெல்லாம் 30 வயதை தாண்டினாலே இது போன்ற சருமம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட துவங்குகிறது. சருமத்தின் நிறம் மாறுதல், கோடுகள் ஏற்படுவது, முகச்சுருக்கம் போன்ற பிரச்சனைகளை கெமிக்கல் இல்லாமல் வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்தலாம் என்பதை தான் இப்பதிவில் பார்க்க போகிறோம்.
Image Source: istock
ஒரு வாரத்திற்கு ஒருமுறையாவது கேரட்டை ஜூஸ் போட்டோ அல்லது பச்சையாக எடுத்து கொள்ள வேண்டும், இதில் அதிகளவு பீட்டா கரோட்டின் என்னும் இயற்கையான நிறமி இருப்பதால் இது முகச்சுருக்கம் உள்ளிட்ட சருமம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கக்கூடியது.
Image Source: istock
தினமும் காலையில் நாம் எலுமிச்சை சாறு கலந்த தேநீரை குடிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம், நமது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கும். மேலும், வைட்டமின் ஈ எண்ணெய், தயிர், மஞ்சள்தூள், ரோஸ் வாட்டர் ஆகியவற்றை சருமத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
Image Source: istock
வாழைப்பழத்தில் தக்காளி சாறை ஊற்றி நன்கு கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகச்சுருக்கம் நீங்க துவங்கும். வாரத்திற்கு 3 முறை என்று, கடலைமாவுடன் தயிரை கலந்து முகத்தில் தடவி வந்தாலும் சுருக்கங்கள் நீங்கும்.
Image Source: istock
நாம் வெளியில் செல்லும் போது நமது சருமத்தை பாதுகாப்பது என்பது மிக முக்கியம், ஏனெனில் சூரிய ஒளியில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்களின் தாக்கம் சருமத்தை பாதிக்கும். எனவே வெளியில் வந்தால் சன்ஸ்க்ரீனை தவறாமல் போட்டு கொள்ளுங்கள்.
Image Source: istock
சருமத்தில் ஐஸ் க்யூப்களை கொண்டு ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்வதன் மூலம், தோல் குளிர்ச்சியடையும். முகத்தில் இருக்கும் சுருக்கங்களும் மறைய துவங்கும். அதே போல் முட்டையின் வெள்ளை கரு, தயிர், கற்றாழை ஜெல், கடலை மாவு ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தாலும் சரும ஆரோக்கியம் மேம்படும்.
Image Source: istock
ஊறவைத்த பாசி பருப்புடன் ரோஜா இதழ்களை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதில் சந்தன பொடி, கடலை மாவு, தயிர், ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால் சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவுறும்.
Image Source: istock
நாம் சாப்பிடும் ஆரோக்கியமான உணவுகள், அதிகளவு தண்ணீர் ஆகியவை நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் தேவைப்படுபவை. ஏனெனில் வறட்சி காரணமாகவே முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுகிறது. எனவே நீர்சத்து அதிகமுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். யோகா, உடற்பயிற்சி ஆகியவையும் சருமத்திற்கு நன்மை பயக்கக்கூடியது.
Image Source: pexels
Thanks For Reading!