[ad_1] விவேகானந்தர் நினைவு மண்டபம் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள்!

May 31, 2024

விவேகானந்தர் நினைவு மண்டபம் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள்!

mukesh M

விவேகானந்தர் நினைவு மண்டபம்!

இந்தியாவின் தலைசிறந்த தத்துவஞானிகளில் ஒருவரான விவேகானந்தர் அவர்களின் நினைவாக கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் ‘விவேகானந்தர் நினைவு மண்டபம்’ தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்!

Image Source: instagram-com

விவேகானந்தர் ஞானம் பெற்ற இடம்!

1892-ஆம் ஆண்டு சுவாமி விவேகனந்தர் இந்த பாறைக்கு நீந்தி சென்று 3 நாட்கள் தொடர்ந்து தியானம் செய்ததாகவும்; தியானத்தின் பலனாய் ஞானம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

Image Source: instagram-com

விவேகானர்ந்தர் நினைவாக மண்டபம்!

விவேகானந்தர் தியானம் செய்த இந்த இடத்தில் அவரது நினைவாக, சமூக ஆர்வலர் ஏக்நாத் ரானடே முயற்சியில் 1970-ஆம் ஆண்டு விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டி எழும்பப்பட்டது.

Image Source: instagram-com

மொத்தம் 2 மண்டபம்!

இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சொந்தமான கட்டின கலைகளை ஒன்றிணைந்து கலவையாக இங்கு மொத்தம் 2 கட்டமைப்புகள் (விவேகானந்தர் மண்டபம் மற்றும் ஸ்ரீபாத மண்டபம்) கட்டப்பட்டது.

Image Source: instagram-com

பார்வதி தவம் செய்த இடம்!

உள்ளூர் மக்கள் நம்பிக்கையின் படி இந்த பாறை ஆனது கன்னியாகுமரியின் தேவி பார்வதி; சிவனை வேண்டி தவம் செய்த இடம் ஆகும். இதன் காரணமாகவே விவேகானந்தர் இங்கு சென்று தியானம் செய்ததாக கூறப்படுகிறது!

Image Source: instagram-com

தேவிக்கு அர்பணிக்கப்பட்ட மண்டபம்!

தேவி தவம் இடம் என்பதன் காரணாக இங்கு அமைக்கப்பட்ட ஸ்ரீபாத மண்டபம் ஆனது தேவிக்கு அர்பணிக்கப்பட்ட மண்டபமாக பார்க்கப்படுகிறது!

Image Source: instagram-com

மூன்று கடல் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது!

விவேகனந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்ட இந்த பாறை ஆனது, வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய மூன்று பெருங்கடல்களும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது!

Image Source: instagram-com

தியான மண்டபம்!

விவேகானந்தர் மண்டபத்தின் ஒரு பகுதியாக அமைந்திருக்கும் தியான மண்டபத்தின் வடிவமைப்பு ஆனது, இந்தியாவின் பல்வேறு கோவில்களின் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

Image Source: instagram-com

திருவள்ளுவர் சிலைக்கு அருகில் உள்ளது!

தமிழகத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திருவள்ளுவர் சிலை (133 அடி சிலை) விவேகனந்தர் நினைவு பாறைக்கு அருகில் உள்ளது. இவ்விரண்டு இடத்திற்கும் இடையில் படகு சவாரி அனுமதிக்கப்படுகிறது!

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: முசோரியில் பார்க்க வேண்டிய அழகிய சுற்றுலா தலங்கள் இதோ!

[ad_2]