Anoj
Jul 4, 2024
நிகழ்ச்சி தொகுப்பாளர், ரேடியோ ஜாக்கி, ஊடகவியலாளர், எழுத்தாளர் என பன்முக திறமையை கொண்டுள்ள நீயா நானா கோபிநாத் பற்றி பலரும் அறியாத விஷயங்களை இங்கு பார்க்கலாம்
Image Source: instagram-com/gobinathsocial
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 1975 ஜூலை 4ம் தேதி சந்திரன் மற்றும் குமுதம் தம்பதிக்கு மகனாக பிறந்தவர் கோபிநாத். இவர் வணிக மேலாண்மையில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
Image Source: instagram-com/gobinathsocial
1997ல் மீடியா பயணத்தை கோபிநாத் தொடங்கினார். ஆரம்பத்தில் சிறிய வேலைகள் செய்துவந்த அவர், ஒரு நிகழ்ச்சியில் ஆங்கர் வராததால் படத்தை ரிவீயூ செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2006ல் பிரபல சேனலில் ஒளிப்பரப்பான நீயா நானா நிகழ்ச்சி, கோபிநாத்தை மக்களிடையே பரீட்சையமான முகமாக மாற்றியது
Image Source: instagram-com/gobinathsocial
கோபிநாத் ஆரம்ப காலத்தில் என்டிடிவி போன்ற சில தேசிய ஊடகங்களுக்கு ரிப்போர்ட்டர் ஆக பணியாற்றியுள்ளார். இதுதவிர, ரேடியோ சிட்டியில் சில காலம் ஆர்.ஜே.,வாகவும் பணியாற்றினார்
Image Source: instagram-com/gobinathsocial
கோபிநாத் இதுவரை 12 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளார். குறிப்பாக, அவர் எழுதிய Please indha Puthagathai vaangatheenga புத்தகம், 4 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. அவர் எழுதியதில் Password மிகவும் நெருக்கமான படைப்பு என கூறினார்
Image Source: instagram-com/gobinathsocial
சின்னத்திரை, ஊடகத்துறையை தாண்டி வெள்ளித்திரையிலும் கோபிநாத் கால்பதித்துள்ளார். இதுவரை 5 படங்களில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். அவரது நிமிர்ந்து நில் படத்தின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது
Image Source: instagram-com/gobinathsocial
2010ல் துர்கா என்பவரை கோபிநாத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு வென்பா எனும் மகள் உள்ளார். மகளுடன் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர செய்வார்
Image Source: instagram-com
கோபிநாத் மீடியாவில் ஜொலிப்பதற்கு முன்பு பகலில் துணி வியாபாரம் செய்ததாக பேட்டியில் தெரிவித்தார். காலையில் தெருதெருவாக அலைந்து துணிகளை விற்பனை செய்துவிட்டு, மாலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர் பணிக்கு ஓடுவேன் என கூறியிருந்தார்
Image Source: instagram-com/gobinathsocial
ஊடகத் துறையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் கோபிநாத், சிறந்த மோட்டிவேஷன் ஸ்பீக்கராக திகழ்கிறார். ஏராளமான நிகழ்வுகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுடன் பல தலைப்புகளில் உரையாடியுள்ளார். இதுதவிர சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார்
Image Source: instagram-com/gobinathsocial
Thanks For Reading!