Jul 20, 2024
கொரோனாவுக்கு பிறகு work from home எனப்படும் வீட்டிலிருந்து வேலை செய்யும் சூழல் உலகமெங்கும் பரவி விட்டது. இது எளிதாக தோன்றினாலும், வீட்டில் வேலை செய்வதில் பல்வேறு சவால்கள் உள்ளது. அதனை எப்படி சரி செய்வது என பார்க்கலாம்.
Image Source: pexels-com
முதலில் ஒரு கால அட்டவணையை உருவாக்கவும். அதாவது வேலையை தொடங்கும் நேரம், முடிக்கும் நேரம், இடைவேளை நேரம், ஓய்வு நேரம் உள்ளிட்டவற்றை சரியாக பின்பற்றவும்.
Image Source: pexels-com
வீட்டினுள் வேலை செய்வதற்கென்று தனியிடத்தை உருவாக்கவும். இதனால் கவனச்சிதறல் தடுக்கப்படுவதோடு வேலையும் எந்தவித சிக்கலும் இல்லாமல் சுமூகமாக முடியும்.
Image Source: pexels-com
பணி செய்யும் இடத்தில் குடும்பத்தினரால் ஏற்படும் கவனச்சிதறல்களை தடுக்க ஹெட்போனில் பாட்டு கேட்கலாம். இதன்மூலம் வெளியில் இருக்கும் சத்தமானது உங்களை பாதிக்காமல் இருக்கும்.
Image Source: pexels-com
ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் 5 நிமிடம் ஓய்வு என்ற முறையில் பணி மேற்கொள்ளுங்கள். சரியான ஓய்வே சுறுசுறுப்பாக பணி செய்ய உதவும்.
Image Source: pexels-com
பணி நேரங்களில் அலுவலக குழுவுடன் தொடர்பில் இருக்க முயற்சியுங்கள். இது தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்க உதவும். அதேசமயம் உங்களின் இலக்குகளை சரியான நேரத்தில் கண்டறிய உதவும்.
Image Source: pexels-com
எப்பவும் வேலை என மூழ்கி இருந்தால் எளிதில் சோர்வடைந்து விடுவீர்கள். எனவே குறிப்பிட்ட நேரம் காமெடி காட்சிகள், பாடல் கேட்பது, நண்பர்களுடன் தொலைபேசி உரையாடல் போன்ற பொழுதுபோக்கான விஷயங்களை செய்யலாம்.
Image Source: pexels-com
தினமும் ஒரே விதமான வேலை செய்வதால் மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். எனவே, உடற்பயிற்சி, தியானம், யோகா, நடைபயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம்.
Image Source: pexels-com
வீட்டில் இருந்து வேலை செய்வதால் உங்களுக்கு சௌகரியமான ஆடைகளை அணிந்து கொள்ளலாம். இதனால் நீங்கள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் பணியை செய்வீர்கள்.
Image Source: pexels-com
Thanks For Reading!