[ad_1] வீட்டிலேயே இயற்கையான முறையில் 'பெடிக்யூர்' செய்வது எப்படி?

Jul 16, 2024

வீட்டிலேயே இயற்கையான முறையில் 'பெடிக்யூர்' செய்வது எப்படி?

Anoj

பழைய நெயில் பாலிஷை அகற்றுங்கள்

முதலில் பாதப் பராமரிப்பு செய்வதற்கு முன்பு கால் நகங்களில் உள்ள நெயில் பாலிஷ் அகற்ற வேண்டும். நகங்கள் சுத்தமாகவும் அழுக்குகள் இல்லாமலும் இருக்க வேண்டும்.

Image Source: istock

நகங்களை ஒழுங்குபடுத்துங்கள்

நகங்களை தேவைக்கேற்ற வகையில் வெட்டி அதன் விளிம்புகளை ஒழுங்குபடுத்துங்கள். நகங்களை வடிவமைக்க நெயில் கட்டரை பயன்படுத்துங்கள்.

Image Source: istock

பாதங்களை தண்ணீரில் ஊற வையுங்கள்

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் எப்சம் உப்பு போட்டு கால்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். இது சருமத்தை மென்மையாகவும் தசைகளை தளர்த்தவும் உதவுகிறது.

Image Source: istock

எக்ஸ்ஃபோலியண்ட் செய்யுங்கள்

பாதங்களின் மீதுள்ள இறந்த சரும செல்களை நீக்க வேண்டும். எனவே ஸ்க்ரப்பை பயன்படுத்தி பாதங்களை நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். பியூமிஸ் கல்லை பயன்படுத்தலாம்.

Image Source: istock

க்யூட்டிகல் பராமரிப்பு

க்யூட்டிகல் ரிமூவரை க்யூட்டிகலில் தடவி ஓரிரு நிமிடங்கள் வையுங்கள். இப்பொழுது க்யூட்டிகல் புஷ்ஷரைக் கொண்டு க்யூட்டிகலை மெதுவாக பின்னுக்கு தள்ளுங்கள். க்யூட்டிகல் ட்ரிம்மரைக் கொண்டு அதிகப்படியான க்யூட்டிகலை ட்ரிம் செய்யுங்கள்.

Image Source: istock

ஃபுட் க்ரீமை பயன்படுத்துங்கள்

உங்கள் பாதங்களில் ஃபுட் க்ரீம் அல்லது லோஷனைக் கொண்டு மசாஜ் செய்யுங்கள். இது உங்கள் சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

Image Source: istock

அடித்தள கோட்டிங் கொடுங்கள்

முதலில் உங்கள் நகங்களுக்கு பேஸ் கோட் கொடுங்கள். இது பாலிஷ் நீண்ட நேரம் நீடிக்க உதவுகிறது. நகத்தில் கறைபடுவதையும் இதன் மூலம் தடுக்க முடியும்.

Image Source: istock

நெயில் பாலிஷ்

பாதங்களை நன்றாக சுத்தம் செய்த பிறகு கால் விரல்களில் நெயில் பாலிஷ்யை அப்ளை செய்யுங்கள். இது உங்கள் கால் விரல் நகங்களுக்கு அழகான தோற்றத்தை தருகிறது. இரண்டு முறை அப்ளை செய்யுங்கள்.

Image Source: pexels-com

மேல் கோட்டிங் செய்தல்

இறுதியாக உங்கள் நகங்களுக்கு மேல் கோட்டிங் செய்யுங்கள். குறைந்தது 30 நிமிடங்கள் காத்திருந்து அதன் பிறகு இந்த மேல் கோட்டிங்கை செய்யுங்கள். ஹாலோகிராபிக் மேற்பூச்சுகள் உங்களுக்கு கூடுதல் மெருகை கொடுக்கின்றன.

Image Source: istock

Thanks For Reading!

Next: ஹேர் டை அடிக்கும் பொழுது சருமத்தில் படியும் கறைகளை நீக்குவது எப்படி ?

[ad_2]