Jun 16, 2024
BY: Nivethaசைனீஸ் உணவு வகைகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஒருவகை சாஸ் தான் இந்த செஸ்வான் சாஸ். உணவின் சுவை மற்றும் காரத்திற்காக இது பயன்படுத்தப்படுகிறது. இதனை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்.
Image Source: pexels-com
காய்ந்த மிளகாய் -20, தக்காளி -4, பூண்டு - 15 பல், டொமேடோ கெட்ச்அப் - 2 மேசைக்கரண்டி, சோயா சாஸ்-2 மேசைக்கரண்டி, எண்ணெய், சர்க்கரை - 2 மேசைக்கரண்டி, இஞ்சி - 1 துண்டு, கொத்தமல்லி தண்டு சிறிதளவு.
Image Source: istock
காய்ந்த மிளகாயை விதை நீக்கி அரைமணி நேரம் வெந்நீரில் நன்கு ஊற விடவும். இஞ்சி, கொத்தமல்லி தண்டு, பூண்டு ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும்.
Image Source: pexels-com
தக்காளிகளை தோல் நீக்கி நன்கு அரைத்து கொள்ளவும். அதே போல் ஊறவைத்த காய்ந்த மிளகாய்களையும் நன்கு மய்ய அரைத்து கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
அடுப்பில் வாணலியை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் கொத்தமல்லி தண்டுகளை போட்டு நன்கு வதக்க வேண்டும்.
Image Source: pexels-com
அவை நன்கு வதங்கிய பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி விடவும்.
Image Source: pexels-com
பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள காய்ந்த மிளகாய், சோயா சாஸ் உள்ளிட்டவற்றை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வேக விடவும்.
Image Source: pexels-com
இறுதியில் டொமேடோ கெட்ச் அப் மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருந்து பின்னர் இறக்கவும். அவ்வளவு தான் செஸ்வான் சாஸ் ரெடி.
Image Source: Samayam Tamil
சூடு ஆறிய பிறகு சாஸை ஒரு பாட்டிலில் மாற்றி பிரிட்ஜில் வைக்கவும். அதிகளவு எண்ணெய் ஊற்றி செய்திருப்பதால் 2 வாரம் வரை இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
Image Source: pexels-com
Thanks For Reading!