[ad_1] வெப்ப அலை-கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான வழிகாட்டுதல்கள்!

வெப்ப அலை-கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கான வழிகாட்டுதல்கள்!

May 30, 2024

By: mukesh M

வெப்ப அலை தாக்குதல்

தொடர்ந்து வெப்பமான சூழ்நிலை நிலவுவதை தான் வெப்ப அலை என்று குறிப்பிடுகிறார்கள். இது பலருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதால் சில பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றுவது நல்லது.

Image Source: pexels-com

மருத்துவர்கள் அறிவுரைகள்

வெப்ப அலை தாக்குதல்களில் இருந்து தப்பி பாதுகாப்பாக இருக்க மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கியுள்ளனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் இந்த வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.

Image Source: pexels-com

கர்ப்பிணி பெண்கள்

இந்த வெப்ப அலை தாக்குதலில் இருந்து தப்பிக்க கர்ப்பிணி பெண்கள் காலை மாலை என 2 முறை குளிக்க வேண்டும். பருத்தி ஆடைகள் அணிவதோடு வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

Image Source: pexels-com

அதிக தண்ணீர் குடிக்கவும்

வெப்ப அலை தாக்குதல் காரணமாக உடலில் நீர்சத்து குறைய அதிக வாய்ப்புள்ளதால் வழக்கத்தினை விட அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்சத்து அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் உட்கொள்வது சிறந்தது.

Image Source: pexels-com

பாலூட்டும் தாய்மார்கள்

பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களும் சத்தான உணவுகள், அதிகளவு தண்ணீர் உள்ளிட்டவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இவர்களும் வெயிலில் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.

Image Source: pexels-com

விளையாட்டு பருவத்தில் இருக்கும் குழந்தைகள்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வெயில் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தடுக்க வேணடும். அதேபோல் வெயில் தாக்குதலால் ஏற்படும் அபாயங்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

Image Source: pexels-com

இருமுறை குளியல்

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை காலை மாலை என குளிக்க வைப்பதன் மூலம் சன் ஸ்ட்ரோக், வியர்குரு போன்ற சரும பிரச்சனைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம்.

Image Source: unsplash

பாட்டிலில் குடிநீர்

குழந்தைகளை எப்பொழுதும் நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அவர்களுக்கு பாட்டிலில் அளந்து குடிநீரை அவ்வப்போது கொடுப்பது மிகவும் முக்கியம்.

Image Source: unsplash

ஏசி

வெயில் காலத்தில் ஏசி, ஏர் கூலர் போன்றவைகளை பயன்படுத்துவதில் தவறு இல்லை. ஆனால் அதனை சரியான முறையில் நன்றாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். வெளிக்காற்று உள்ளே வர காலை-மாலை நேரங்களில் ஜன்னலை திறந்து வைத்தல் மிகவும் முக்கியம்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: புத்திசாலியாக வேண்டுமா? இந்த பழக்கங்களை ஃபாலோ பண்ணுங்க!

[ad_2]