Jun 14, 2024
வெயில் காலத்தில் தக்க பாதுகாப்பு இல்லாமல் அதிக நேரம் சூரிய வெப்பத்தில் இருக்கும் நிலையில் சருமத்தில் எரிச்சல், சிவத்தல், தோல் உரிதல், டேன் ஆகுதல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதற்கான சில டிப்ஸ் இதோ உங்களுக்காக
Image Source: pexels-com
குளிர்ந்த நீரில் ஓர் துணியினை ஊறவைத்து அதனை வெயில் பட்ட சரும பகுதிகளில் 10-15 நிமிடங்கள் வரை வைத்து பிரஸ் செய்வதன் மூலம் வீக்கம், எரிச்சல் உள்ளிட்டவை குறையும்.
Image Source: pexels-com
எப்போவுமே சருமத்தில் வெயிலில் இருந்து வந்தவுடன் நேரடியாக ஐஸ்-ஐ பயன்படுத்த கூடாது. ஏனெனில் இது சூரிய ஒளியில் பட்டு எரிந்த உணர்திறன் திசுக்களை மேலும் சேதப்படுத்தும்.
Image Source: pexels-com
உங்கள் சருமத்தினை மென்மையான நறுமணமில்லா மாய்ஸ்ச்சரைஸர்கள் அல்லது கற்றாழை ஜெல் போன்றவை கொண்டு ரீஹைட்ரேட் செய்வது என்பது மிகவும் அவசியமானது.
Image Source: pixabay
சருமம் வெயிலின் வெப்பத்தில் இருந்து மீள தளர்வான ஆடைகள் அணியலாம்.
Image Source: pexels-com
சந்தனம் மற்றும் தயிரை கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவுவதன் மூலம் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி சருமம் பொலிவாகும்.
Image Source: pexels-com
தேங்காய் பாலுடன் சந்தனம் சேர்த்து முகத்தில் மென்மையாக தடவுவதன் மூலம் கருமை நீங்கி சருமம் ஒளிரும்.
Image Source: pexels-com
நன்கு பழுத்த பப்பாளி பழம், தேன் மற்றும் பாலினை எடுத்து சருமத்தில் பூசி சிறிது நேரத்திற்கு பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவுவதன் மூலம் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
Image Source: pexels-com
தக்காளி சாறினை கொண்டு முகத்தில் நன்கு மசாஜ் செய்து கழுவினாலும் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
Image Source: pexels-com
Thanks For Reading!