Jul 29, 2024
சூரியனின் புற ஊதா கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாத்து கொள்ள சன்ஸ்கிரீன் அணிவது அவசியமாகும். அவை கிரீம், லோஷன், ஸ்ப்ரே என பல வடிவங்களில் இருக்கும் நிலையில், தற்போது மாத்திரை வடிவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
சன்ஸ்கிரீன் மாத்திரையில் வைட்டமின் சி, ஈ மற்றும் கே போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளன. அவை சூரிய ஒளி தாக்குதலில் இருந்து பாதுகாத்திட உடலுக்கு இயற்கையான பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Image Source: istock
இந்த மாத்திரையில் polypodium leucotomos கலவை இருப்பதால், சன் பர்ன் பாதிப்பை குறைத்திட உதவக்கூடும். அதேபோல், சன் டானிங் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கக்கூடும்
Image Source: istock
சன்ஸ்கிரீன் மாத்திரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், ஃப்ரீ ரேடிக்கல் எதிர்த்து போராடி செல் சேதமடையாமல் பாதுகாக்கிறது. இதன் மூலம் சருமம் முன்கூட்டியே வயதாகுவது தடுக்கப்படுவது மட்டுமின்றி சரும புற்றுநோய் அபாயமும் குறையக்கூடும்
Image Source: istock
இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடனட் மற்றும் கரோட்டினாய்டுகள் ஆகியவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உதவுகிறது
Image Source: istock
சன்ஸ்கிரீன் கிரீம் பொறுத்தவரை, சூரிய ஒளி வெளிப்படுத்தும் இடத்தில் தடவி, அங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதை உறுதி செய்திட முடியும். ஆனால், சன்ஸ்கிரீன் மாத்திரையில் குறிப்பிட இடத்தை டார்கெட் செய்திட முடியாது
Image Source: istock
வெளியே செல்கையில் சன்ஸ்கிரீன் தடவினால், சூரிய ஒளியில் இருந்து உடனடி பாதுகாப்பு கிடைக்கக்கூடும். ஆனால், சன்ஸ்கிரீன் மாத்திரை பொறுத்தவரை, வெளியில் செல்வதற்கு 30 நிமிடங்கள் முன்பு சாப்பிட்டு மட்டுமே பலனை காண முடியும்
Image Source: istock
சன்ஸ்கிரீன் மாத்திரை சில பக்க விளைவுகளை உண்டாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, நாள்பட்ட நோய்களுக்கு மருந்துகள் எடுத்துகொள்பவர்களுக்கு ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது
Image Source: istock
சன்ஸ்கிரீன் மாத்திரையில் சரும ஆரோக்கியத்தை காக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட் இருந்தாலும், அதன் செயல்திறனை அதிகரிக்க சன்ஸ்கிரீன் கிரீன் பயன்பாடும் அவசியமாகும். இரண்டையும் பயன்படுத்துவது சருமத்திற்கு சூரிய ஒளியில் இருந்து 2 மடங்கு பாதுகாப்பு தரக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!