[ad_1] வெயிலுக்கு இதமாக இருக்கும் 'தர்பூசணி ஐஸ்கிரீம்' செய்முறை

May 4, 2024

BY: Anoj

வெயிலுக்கு இதமாக இருக்கும் 'தர்பூசணி ஐஸ்கிரீம்' செய்முறை

தர்பூசணி ஐஸ்கிரீம்

கோடையில் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடுவது வழக்கம். அதை கடைகளில் வாங்குவதற்கு பதிலாக, வீட்டிலேயே ஹெல்தியாக தர்பூசணி கொண்டு எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: instagram-com/sarah_licious_eats

தேவையான பொருட்கள்

தர்பூசணி - 1; கிரீம் மில்க் - 1 லிட்டர்; சர்க்கரை - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் தர்பூசணி பழத்தை சிறிய துண்டுகளாக கட் செய்ய வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 2

அவற்றை பவுலில் போட்டு கரண்டி பயன்படுத்தி நன்றாக அழுத்தி சாற்றை எடுக்க வேண்டும். இதற்கு பிளெண்டர் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 3

பின் தர்பூசணி சாற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். அந்த பாத்திரத்தை அடுப்பில் குறைவான நெருப்பில் வைத்து சூடு செய்யவும். சாறு கெட்டியான கலவைக்கு வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும்

Image Source: istock

செய்முறை படி - 4

பிறகு, ஒரு பவுலில் கிரீம் மில்க்கை ஊற்றி அதை பிளெண்டர் பயன்படுத்தி நன்றாக மிக்ஸ் செய்து திக்கான பதத்திற்கு கொண்டு வர வேண்டும்

Image Source: pexels-com

செய்முறை படி - 5

இத்துடன் சர்க்கரை சேர்த்து, இரண்டும் நன்றாக மிக்ஸ் ஆகும் வரை கலக்க வேண்டும்.

Image Source: istock

செய்முறை படி - 6

இறுதியாக, ஏற்கனவே ரெடி செய்துள்ள தர்பூசணி சாற்றை சேர்த்து, நன்றாக மிக்ஸ் செய்து கிரீம் பதத்திற்கு கொண்டு வர வேண்டும். அதை பவுலில் மாற்றி பிரிட்ஜில் வைத்துவிட வேண்டும்

Image Source: istock

ஐஸ்கிரீம் ரெடி

சுமார் 5 மணி நேரம் கழித்து வெளியே எடுத்தால், சுவையான தர்பூசணி ஐஸ்கிரீம் ரெடி. இதை கோடை வெயிலுக்கு சாப்பாட்டால் இதமாக இருக்கக்கூடும்

Image Source: instagram-com/omniblendsa

Thanks For Reading!

Next: ராயலசீமா ஸ்பெஷல் ‘புளகம் சாதம்’ செய்முறை!

[ad_2]