May 2, 2024
கோடை காலத்தில் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அவை சோர்வு, மயக்கம் மற்றும் தசைப்பிடிப்புக்கு வழிவகுக்கும். இந்தப் பதிவில், உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கவும், இழந்த எலக்ட்ரோலைட் மீட்டு தரவும் உதவும் பானங்கள் பற்றி காணலாம்
Image Source: istock
இளநீரில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் சோடியம் போன்ற அத்தியாவசிய எலக்ட்ரோலைட் இருப்பதால், உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கும் சிறந்த பானமாக திகழ்கிறது. இது சர்க்கரை நிறைந்த எனர்ஜி பானங்களுக்கு சிறந்த மாற்றாகும்
Image Source: pexels-com
தர்பூசணி ஜூஸ், நீரேற்றத்திற்கான சிறந்த ஆதாரமாகும். அதிலுள்ள பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள், இழந்த எலக்ட்ரோலைட் மீட்டு தருவதோடு ப்ரீ ரேடிக்கல் சேதங்களில் இருந்து பாதுகாக்க செய்கிறது
Image Source: istock
வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளடக்கமும், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற மினரல்களும் உள்ளது. வெள்ளரி துண்டுகளை தண்ணீரில் சேர்த்து, சில மணி நேரம் ஊறவைத்து குடிக்க வேண்டும். இந்த எலக்ட்ரோலைட் பானம் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கும்
Image Source: istock
குணப்படுத்தும் பண்புக்காக அறியப்படும் கற்றாழை, எலக்ட்ரோலைட்களின் சிறந்த ஆதாரமாகும். அதிலுள்ள வைட்டமின், மினரல் மற்றும் அமினோ அமிலங்கள் ஆகியவை உடலில் நீரேற்றத்தை பராமரிப்பதோடு செரிமான அசெளகரியங்களை போக்கக்கூடும்
Image Source: istock
எலக்ட்ரோலைட் நிறைந்த மூலிகைகளை கொண்டு தேநீர் தயாரித்து குடிக்க செய்யலாம். செம்பருத்தி, ரோஸ்மேரி போன்றவை நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட் பண்புகளுக்காக அறியப்படுகிறது. இவற்றை சுடு தண்ணீரில் சேர்த்து, ஆறவைத்து குடிக்க செய்யலாம்
Image Source: istock
பச்சை இலை காய்கறிகளில் கால்சியம், மக்னீசியம் ஆகிய 2 முக்கிய எலக்ட்ரோலைட்கள் காணப்படுகின்றன. எனவே, கீரை, செலரி போன்றவற்றை பிளெண்டரில் அடித்து ஜூஸாக குடிப்பது கோடையில் நல்ல பலனை தரக்கூடும்
Image Source: istock
லெமனேடு, எலக்ட்ரோலைட் நிறைந்த சம்மர் பானமாகும். பிரஷ் எலுமிச்சை துண்டுகளை தண்ணீரில் சேர்த்து, ஒரு சிட்டிகை கடல் உப்பு சேர்த்து குடிக்க செய்யலாம். பானத்தின் சுவையை அதிகரிக்க தேன் லேசாக சேர்க்க செய்யலாம்.
Image Source: istock
கோடை காலத்தில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் ஈடுபடுவோர், வீட்டிலேயே எலக்ட்ரோலைட் நிறைந்த பானத்தை தயாரித்து பருகலாம். தண்ணீரில் ஆரஞ்சு சாறு, ஒரு சிட்டிகை உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து சேர்த்து அருந்தலாம்
Image Source: istock
Thanks For Reading!