Jun 24, 2024
நம் உடலின் செயல்பாட்டிற்கு மட்டுமல்ல நம் சருமத்தின் செயல்பாட்டிற்கும் தண்ணீர் இன்றியமையாதது. தண்ணீர் குடிப்பது சரும அழகை மேம்படுத்த எந்த மாதிரியான வழிகளில் உதவி புரிகிறது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
நீங்கள் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சீக்கிரம் உங்கள் சருமம் வறண்டு போக வாய்ப்பு உள்ளது. இது சருமத்தில் கடுமையான சேதத்தை உண்டாக்கும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் தொய்வடைந்த சருமத்தை இறுக்கமாக்கலாம்.
Image Source: istock
சருமத்தின் pH அளவை சமநிலையில் வைப்பது மிகவும் அவசியம். இந்த pH அளவு மாறும் போது சரும பாதிப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். தண்ணீர் குடிப்பது உங்கள் சரும pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது.
Image Source: pexels-com
தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள நச்சுக்களை எளிதாக வெளியேற்ற முடியும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. உடலில் உள்ள உள்ளுறுப்புகள் நன்றாக செயல்பட உதவுகிறது.
Image Source: istock
தண்ணீர் உங்கள் உடலை நீரேற்றமாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. இது சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை காக்கிறது. தண்ணீர் குடிப்பதால் சரும சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகளை போக்க முடியும்.
Image Source: istock
நம் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் சரும துளைகளை அடைத்து முகப்பருக்களை உண்டாக்கும். தண்ணீர் குடிப்பதன் மூலம் நச்சுக்களை நீக்க முடியும். இதனால் முகப்பருக்கள் வருவது தடுக்கப்படும்.
Image Source: istock
ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கும் போது சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்ய முடியும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.
Image Source: istock
நீர்ச்சத்து குறைவாக இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்க போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்.
Image Source: istock
உங்களின் எடை, உயரம் மற்றும் தேவைப் பொருத்து தண்ணீரை எடுத்துக் கொள்ளலாம். பெரியவர்களாக இருந்தால் தினமும் 5-8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!