Jul 2, 2024
உங்களுக்கு இயற்கையான பளபளப்பு வேண்டும் என்றால் படிகாரக்கற்களை பயன்படுத்துங்கள். அதன் உப்புச் சத்து சரும செல்களை சுருக்கி சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. சருமத்தை பொலிவாக வைக்கிறது.
Image Source: istock
படிகாரக்கற்கள் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை தடுக்க உதவுகிறது. இது ஹைப்பர் பிக்மென்டேஷன் மற்றும் முகப்பருக்களை குறைக்கிறது. டேனின்களை குறைக்கிறது.
Image Source: istock
படிகாரக் கற்களில் அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உள்ளன. படிகாரம் சருமத்தை இறுக்கமாக வைக்க உதவுகிறது. சரும துளைகளை சுருக்கி சரும கோடுகள் மற்றும் சரும சுருக்கங்களை போக்குகிறது.
Image Source: istock
படிகாரக்கற்கள் மூலம் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்க முடியும். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகளை போக்குகிறது. ஒரு வாரத்திற்கு இரண்டு முறை ரோஸ் வாட்டருடன் படிகாரப் பேஸ்ட்டை பயன்படுத்தி வாருங்கள்.
Image Source: istock
முகத்தில் உள்ள தழும்புகள் மறைய ரோஸ் வாட்டருடன் படிகாரப் பேஸ்ட்டை கலந்து பயன்படுத்துங்கள். நல்ல பொலிவான சருமம் பெறுவீர்கள்.
Image Source: istock
கிளிசரினுடன் சேர்த்து படிகாரக்கற்களை பயன்படுத்துவது முகப்பருக்களை போக்க பயன்படுகிறது. இது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. சரும துளைகளை திறக்கிறது.
Image Source: istock
படிகாரக்கற்களை பயன்படுத்தும் போது கண்களுக்கு அருகில் கொண்டு செல்லாமல் பயன்படுத்துங்கள். இது கண்களை எரிச்சல் படுத்த வாய்ப்பு உள்ளது. கண்ணில் பட்டால் 15-20 நிமிடங்கள் கண்களை கழுவுங்கள்.
Image Source: istock
படிகாரக்கற்கள் சிலருக்கு அழற்சியை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. நமநமப்பு, சரும வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. அழற்சி தென்பட்டால் பயன்படுத்துவதை நிறுத்துவது நல்லது.
Image Source: pexels-com
உங்கள் முகத்தில் வீக்கம், சிவத்தல் மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது வறண்ட அல்லது சென்ஸ்டிவ் சருமமாக இருந்தால் படிகாரக்கற்கள் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்
Image Source: istock
Thanks For Reading!