[ad_1] ​வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Aug 2, 2024

​வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Nivetha

கறிவேப்பிலை

கறிவேப்பிலை இலை இல்லாத சமையல் முழுமடையாது என்று கூறும் அளவிற்கு அனைத்து உணவுகளிலும் இது சுவையை கூட்ட பயன்படுத்தப்படுகிறது. இதில் ஏராளமான மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. இந்நிலையில் தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மைகள் ஏற்படுகிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

Image Source: istock

ரத்த சுத்திகரிப்பு

தினமும் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் இதிலுள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுக்கள் உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற செய்து ரத்தத்தை சுத்தம் செய்கிறது. காலையில் டீ காபிக்கு பதில் இதனை குடித்தால் கல்லீரல் ஆரோக்கியமும் மேம்படும்.

Image Source: pixabay

செரிமானம்

கறிவேப்பிலையில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளனஇதனை தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் செரிமான அமைப்புகள் பலமாகி செரிமானம் மேம்படும், நாள்பட்ட மலச்சிக்கல் பிரச்சனை இருப்போர் இதனை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் நல்ல பலன் கிடைக்கும்.

Image Source: istock

நீரிழிவு நோய்

கறிவேப்பிலையில் நமது ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கக்கூடிய பண்புகள் அதிகளவில் உள்ளன. எனவே நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலை சாற்றை டீ காபிக்கு பதில் காலையில் தினமும் குடித்தால் அவர்களது ரத்த சர்க்கரை அளவு சமநிலையாக பராமரிக்கப்படும்.

Image Source: istock

சரும ஆரோக்கியம்

கறிவேப்பிலை சாற்றில் அதிகளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுக்கள் உள்ளதால் இதனை உட்கொள்ளும் பொழுது சருமத்தை சேதப்படுத்தக்கூடிய ப்ரீ-ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது. மேலும் இந்த சாறு முகத்திற்கு ஒரு தனி பொலிவினை கொடுக்க உதவும்.

Image Source: istock

கொலஸ்ட்ரால்

கறிவேப்பிலை நமது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றம் செய்கிறது, இதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. அதே போல் இதனை தினமும் நாம் உட்கொள்ளும் பட்சத்தில் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Image Source: istock

எடை குறையும்

கறிவேப்பிலையில் நார்ச்சத்துக்கள் அதிகம், கலோரிகள் குறைவு. இதனை தினமும் சாப்பிட்டால் உடலின் எடை குறையும். அதுவே காலையில் தினமும் சாறினை குடித்தால் உடல் எடை குறைவது மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

Image Source: pixabay

முடி வளர்ச்சி

முடி கொட்டுகிறது என்றாலே நாம் நினைவிற்கு வருவது கறிவேப்பிலை தான், இதில் முடியின் ஆரோக்கியத்தை பேணும் பண்புகள் அதிகம் . தினமும் இதன் சாற்றை நாம் குடித்து வரும் பட்சத்தில் முடி உதிர்வு குறையும், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும், முடி கருமையாகவும், வலுவாகவும் வளரும்.

Image Source: istock

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை நன்கு கொதிக்க விடுங்கள். ஒரு கைப்பிடி கறிவேப்பிலை இலைகளை எடுத்து நன்கு கழுவி கொதிக்கும் நீரில் போட்டு நன்கு ஊற விடுங்கள். ஆறிய பிறகு அந்நீரை வடிகட்டி, சுவைக்கு எலுமிச்சை சாறு, தேன் வேண்டுமானால் தேவைக்கேற்ப சேர்த்தால் கறிவேப்பிலை ஜூஸ் தயார்.

Image Source: pexels

Thanks For Reading!

Next: 'நுரையீரல்' ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மூலிகை பானங்கள்

[ad_2]