Jun 29, 2024
சாதாரண காபிகளை வெறும் வயிற்றில் காலையில் குடித்தால் உடலுக்கு பல்வேறு தீங்குகளை விளைவிக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதற்கு மாற்றாக சுக்கு காபியினை காலையிலும், மாலையிலும் குடிக்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
Image Source: istock
சுக்கு காபி என்பது அஜீரண கோளாறுகள், வயிற்றுப்போக்கு, வயிறு வலி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த மருந்தாகிறது. சளி, தொண்டை புண் உள்ளிட்ட தொந்தரவுகளுக்கும் இது தீர்வளிக்கும்.
Image Source: istock
சுக்கு காபியை தொடர்ந்து குடித்து வரும் பட்சத்தில் அவர்களுக்கு குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு குமட்டலையும் குணப்படுத்தக்கூடியது.
Image Source: istock
சுக்கு காபி குடித்தால் ரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்கப்படுகிறது. ரத்த உறைவு, பக்கவாதம் போன்ற அபாயத்தையும் ஏற்படாமல் தடுக்கிறது.
Image Source: istock
சுக்கு காபியில் கொத்தமல்லி விதைகளை போட்டு தயார் செய்து குடிப்பதால் அவை பெண்களின் மாதவிடாய் சுழற்சியை சீராக்குவதோடு, ஹார்மோன் சமநிலையில் செயல்படவும் உதவுகிறது.
Image Source: istock
இந்த காபியில் பயன்படுத்தப்படும் சுக்கில் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் நிறைந்துள்ளதால் மாதவிடாய் வலிகளுக்கு சிறந்த நிவாரணியாகவும் இது செயல்படக்கூடும்.
Image Source: istock
சுக்கு காபி செய்ய தேவையான பொருட்கள், சுக்கு 1 அங்குல துண்டு, கொத்தமல்லி விதைகள் 1/4கப், பனை வெல்லம் 1/4கப், மிளகு 1டீஸ்பூன், ஏலக்காய்-2.
Image Source: pixabay
ஒரு கடாயில் கொத்தமல்லி விதைகள், மிளகு, ஏலக்காய் உள்ளிட்டவைகளை நன்றாக வாசனை வரும் வரை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும். சுக்கு தோலினை லேசாக சுரண்டிவிட்டு நசுக்கி எடுத்து அனைத்தையும் ஒன்றாக கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு பாத்திரத்தில் நீர் ஊற்றி கொதித்த பிறகு பனை வெல்லத்தை துருவி போட்டு நன்றாக கரைந்த பிறகு வடிக்கட்டி எடுத்து கொள்ளுங்கள். பின்னர் பாத்திரத்தில் 1 கப் நீர் ஊற்றி, அரைத்த சுக்கு பொடி 1 ஸ்பூன் போட்டு கொதிக்கவிட்டு வெல்ல நீரை ஊற்றி இறக்கினால் சுக்கு காபி ரெடி.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!