May 15, 2024
வேப்ப எண்ணெய் முகப்பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது. வேப்ப எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது.
Image Source: istock
வேப்ப எண்ணெய் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. சருமம் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க உதவுகிறது. வேப்ப எண்ணெயை சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
Image Source: istock
வேப்பம் பூ ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள வடுக்கள் மற்றும் தழும்புகளை போக்குகிறது. 2-3 வாரங்களுக்கு இதை நீங்கள் பயன்படுத்தி வந்தால் சருமம் பிரகாசமாக இருக்க உதவி செய்யும்.
Image Source: istock
வேப்ப எண்ணெய் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. சரும கோடுகளை சரி செய்கிறது. வேப்ப எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது மெலனின் உற்பத்தியை குறைக்க உதவுகிறது. கரும்புள்ளிகள் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கிறது.
Image Source: istock
வேப்ப எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சரும நிறத்தை மேம்படுத்துவதோடு கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை போக்குகிறது. இதன் மூலம் சருமம் இளமையாகவும், பொலிவாகவும் இருக்கும். மென்மையான மிருதுவான சருமத்தை பெற முடியும்.
Image Source: istock
வேப்ப எண்ணெயில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வீக்கமடைந்த சருமத்தை சரி செய்கிறது. சரும தொற்றுக்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
Image Source: pexels-com
வேப்பம் பூ ஃபேஸ் பேக் சரும துளைகள் அடைபட்டு ஏற்படும் வெண்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்குகிறது. பெரிய சரும துளைகளை குறைக்கிறது. பாக்டீரியாக்கள் சருமத்தினுள் நுழைவதை தடுக்கிறது.
Image Source: istock
வேப்ப எண்ணெயில் கெடுனின் மற்றும் நிம்பிடோல் போன்ற மருந்துகள் உள்ளன. இது பூஞ்சை தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது. இது பூஞ்சை தொற்றுக்கு விரைவான நிவாரணத்தை வழங்குகிறது.
Image Source: istock
வேப்ப எண்ணெய் சருமத்தில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. அதிகப்படியான எண்ணெய் சுரப்பால் முகத்தில் முகப்பருக்கள் தோன்றலாம். இதைச் சரி செய்ய வேப்ப எண்ணெய் உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!