[ad_1] ​வெல்ல பனையின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா ?

Jul 4, 2024

​வெல்ல பனையின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன தெரியுமா ?

Nivetha

​வெல்ல பனை

இந்திய துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் காணப்படும் ஒரு வகை பூக்கும் தாவரம் தான் வெல்ல பனை. இம்மரத்தை கித்துள் பனை, ஒயின் பாம், சாகோ பனை, டோடி பனை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

Image Source: pixabay

ஆரோக்கிய நன்மைகள்

வெல்ல பனை என்னும் கித்துள் பனை சளி, இரும்பல், செரிமான பிரச்சனைகள், ஒற்றை தலைவலி, மலச்சிக்கல், எடை குறைப்பு உள்ளிட்டவைகளுக்கு தீர்வளிக்கக்கூடியது.

Image Source: pixabay

ரத்த அழுத்தம்

இந்த வகை பனை உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, மாதவிடாய் வலிகள், மூட்டு வலி, ரத்த சுத்திகரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை செய்வதோடு எனர்ஜி பூஸ்டராகவும் செயல்படக்கூடியது.

Image Source: pixabay

கித்துள் மாவு

கித்துள் மரத்தில் இருந்து எடுக்கப்படும் 'ஸ்டார்ச்' கித்துள் மாவு என்று அறியப்படுகிறது. இது அமிலத்தன்மையால் ஏற்படும் வயிற்றுப்புண், தலைவலி போன்றவைகளை குணப்படுத்தும் பாட்டி வைத்தியமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த கித்துள் மாவு எடுப்பது எண்பது மிகவும் கடினமான ஓர் வேலையாகும்.

Image Source: pixabay

குடல் ஆரோக்கியம்

இந்த கித்துள் மாவிலுள்ள ஆன்டி ஆக்சிடெண்ட்டுக்கள் மற்றும் நார்சத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகப்பெரிய பங்காற்றுகிறது. இலங்கையில் இந்த மாவினை வைத்து செய்யப்படும் கித்துள் புட்டு, கித்துள் மாவு கஞ்சி உள்ளிட்டவை மிக பிரபலமான காலை உணவாக உள்ளது.

Image Source: istock

பதநீர்

இந்த மரத்தில் இருந்து பெறப்படும் பதநீர் என்று கூறப்படும் கித்துள் பால் உடல் சூட்டினை தணிக்கும். கித்துள் மரம் பூப்பது ஒரு பசு கன்று ஈன்றதற்கு சமானம் என்று கூறுவார்கள். காரணம் இதன் ஒரு பூ ஒரு வருடத்திற்கும் மேல் பயனளிக்கும்.

Image Source: pixabay

மதுபானங்கள்

இந்த தாவரத்தின் மஞ்சரியில் இருந்து பெறப்படும் சாறையும், தண்டுகளையும் கொண்டு ஜவ்வரிசி சர்க்கரை மற்றும் மதுபானங்கள் தயாரிக்கப்படுகிறது.

Image Source: pixabay

பாம்பு கடியால் ஏற்படும் விஷம்

இம்மரத்தின் விதை மாவு கஞ்சியாக தயாரிக்கப்படுகிறது. இது இரைப்பை புண்கள், பாம்பு கடியால் ஏற்படும் விஷ தாக்கு, வாத வீக்கம் ஆகியவற்றை குணப்படுத்த பயன்படுகிறது. அதே போல் இதன் வேர் பல் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Image Source: pixabay

மீன்பிடி கம்பிகள்

இம்மரத்தின் காய்ந்த இலைகளற்ற கிளைகள் மீன்பிடிக்கும் கம்பிகளாக பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: pexels

Thanks For Reading!

Next: கொலஸ்ட்ராலை முற்றிலும் உறிஞ்சி எடுக்க உதவும் மூலிகை இலை

[ad_2]