Jun 21, 2024
இந்தியாவை பூர்வீகமாக கொண்டுள்ள ஏராளமான கிரிக்கெட் வீரர்கள், வெளிநாட்டு அணிகளுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களின் பட்டியலை இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: instagram-com/vikram-s07
2024 டி20 உலக கோப்பையில் சவுரப் நெட்ரவால்கர் பெயர் பிரபலமாகியுள்ளது. மும்பையில் பிறந்து வளர்ந்த சவுரப், தற்போது அமெரிக்கா அணிக்காக விளையாடி வருகிறார்
Image Source: instagram-com/saurabh_netra
பஞ்சாபில் சீமா குர்த் கிராமத்தில் பிறந்த விக்ரம்ஜித் சிங், தற்போது நெதர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். 2023 ஒருநாள் உலக கோப்பையில், நெதர்லாந்து அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்தார்
Image Source: instagram-com/vikram-s07
விக்ரம்ஜித் சிங் போலவே, ஆர்யன் தத்-வும் பஞ்சாபில் பிறந்த மற்றொரு நெதர்லாந்து அணி கிரிக்கெட் வீரர். இவரும் இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை போட்டியில் விளையாடியுள்ளார்
Image Source: instagram-com/aryan-dutt
ரச்சின் ரவீந்திரா பூர்வீகம் கர்நாடாக மாநிலம் பெங்களூரு ஆகும். அவரது பெற்றோர் நியூசிலாந்தின் வெல்லிங்டனில் குடியேறினர். நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டராக திகழும் ரச்சின் ரவீந்திரா, 2023 ஒருநாள் உலக கோப்பையிலும், சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடியுள்ளார்
Image Source: instagram-com/rachinravindra
நியூசிலாந்து அணியின் மாயாஜால சுழற்பந்து வீச்சாளரான இஷ் சோதி, பஞ்சாப்பின் லூதியானா நகரை பூர்வீகமாக கொண்டவர். டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடக்கூடியவர்
Image Source: instagram-com/ic3_odi
தென்னாப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் கேசவ் மஹராஜ்-ன் பூர்வீகம், உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டம் ஆகும். தென்னாப்பிரிக்கா அணியின் பிளேயிங் 11ல் கேசவ் மஹராஜ் கட்டாயம் இடம்பெறுவார்
Image Source: instagram-com/keshavmaharaj16
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் நாசர் ஹுசைன், சென்னையில் பிறந்தவர். இவர் இங்கிலாந்து அணிக்காக 96 டெஸ்டில் 5,764 ரன்களும், 88 ஒருநாள் போட்டிகளில் 2,332 ரன்களும் எடுத்துள்ளார்
Image Source: x-com
இவர் குஜராத்தில் வசித்த முஸ்லிம் குடுபத்தை சேர்ந்தவர். தென்னாப்பிரிக்கா அணியின் சிறந்த தொடக்க ஆட்டக்காரராக திகழ்ந்த அம்லா, 2023ல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெற்றார்
Image Source: x-com
Thanks For Reading!