Aug 9, 2024
கோடைக்காலங்களில் வெயிலின் வெப்பத்தால் வியர்வை ஏற்படுவது என்பது சாதாரணமான விஷயமாகும். ஆனால் ஒரு சிலருக்கு வெயிலில் ஒரு 5 நிமிடம் நடந்தாலே குளித்தது போல் உடல் முழுவதும் வியர்த்து கொட்டும். இப்படி வழக்கத்திற்கு மாறாக அதிகளவு வியர்வை வெளியானால் கவனம் தேவை.
Image Source: istock
அதிகளவு வியர்த்தல் என்பது பல்வேறு காரணங்களை உள்ளடக்கியது என்றாலும், இது வைட்டமின் டி குறைபாட்டின் ஓர் அறிகுறியாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த குறைபாட்டின் காரணம் என்ன, அதற்கான அறிகுறிகள் மற்றும் தீர்வுகள் என்னவென்பதை தான் இப்பதிவில் தற்போது காணவுள்ளோம்.
Image Source: istock
அதிகளவு வெயில் படாத இடங்களில் வசிப்போர், வெளியில் வராமல் வீட்டிற்குள்ளேயே இருப்போர், வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்போர் ஆகியோருக்கு இந்த வைட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது.
Image Source: istock
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் டி என்பது மிக முக்கியம். அப்படி இருக்கையில், இது குறையும் பட்சத்தில் உடல் சோர்வு, களைப்பான உணர்வு ஆகியவை எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக தூங்கினாலும் மந்தமான நிலை நீடிக்கும்.
Image Source: istock
தசைகள் வலுப்பெற வைட்டமின் டி அவசியம் தேவைப்படும், அதுவே அது நமது உடலில் குறையும் பட்சத்தில் நமது தசைகள் பலவீனமாகக்கூடும். இதன் காரணமாக நமது அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படுவதோடு, மன அழுத்தம் ஏற்படுமாம்.
Image Source: istock
மனித உடலில் இந்த வைட்டமின் டி எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியம் மற்றும் வலுவில் அதிக பங்களிக்கிறது. இந்த குறைபாடு ஏற்பட்டால் எலும்புகளில் வலிகள் ஏற்படுகிறது, ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படுவதற்கான அபாயத்தையும் அதிகரிக்கிறது.
Image Source: istock
வைட்டமின் டி நமது முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஓர் ஊட்டச்சத்தாகும். இது குறையும் பட்சத்தில் நமது தலைமுடி உதிர துவங்குவதோடு, முடியின் வலிமையும் பாதிக்கப்படும். மேலும் இந்த வைட்டமின் டி உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும் நன்மைகளை கொடுக்கக்கூடியது.
Image Source: pexels
நமது உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் இருதய ஆரோக்கியம் பாதிக்கப்படும், இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் என்று கூறப்படுகிறது. சூரிய ஒளியில் இருந்து அதிகளவு வைட்டமின் டி நமது உடலில் கிரகிக்கப்படுவதால் முடிந்தளவு உடம்பில் இளம் வெயில் படும்படி நடைப்பயிற்சியினை மேற்கொள்ளுங்கள்.
Image Source: istock
வைட்டமின் டி வியர்வை சுரப்பிகளின் செயல்பாட்டினை குறைத்து அதிகளவு வியர்வை வெளியாவதை கட்டுப்படுத்துகிறது. எனவே இந்த குறைபாட்டினை நீக்க வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அதே போல் மதிய வெயிலில் அதிகம் வெளியில் வராமல் தவிர்ப்பது நல்லது.
Image Source: istock
Thanks For Reading!