Jun 20, 2024
BY: Anojவெள்ளரிக்காய் பயன்படுத்தி பொரியல், ஜூஸ், ரைத்தா மட்டுமே சாப்பிட்டுள்ள நிலையில், இன்று புதுமையான சுவையில் எப்படி ரொட்டி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
வெள்ளரிக்காய் - 1; கொத்தமல்லி - சிறிதளவு; ப.மிளகாய் - 2; எண்ணெய் - தேவையான அளவு; கோதுமை மாவு - 1 கப்
Image Source: istock
முதலில் ப.மிளகாய் மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பின் வெள்ளரிக்காயை தோல் சீவி நன்றாக துருவிக்கொள்ள வேண்டும்
Image Source: istock
பிறகு, ஒரு பவுலில் துருவிய வெள்ளரிக்காய், கோதுமை மாவு, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
Image Source: istock
இப்போது, தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கலவையை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
Image Source: istock
கலவை சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் சுமார் 30 நிமிடங்கள் நன்கு ஊறவிட வேண்டும்
Image Source: istock
பிறகு, பிசைந்து வைத்த மாவை சிறிய உருண்டையாக பிடித்து, ரொட்டி வடிவிற்கு தட்டிக்கொள்ள வேண்டும்
Image Source: pexels-com
இப்போது, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய் தேய்த்து சூடாக்க வேண்டும். அதில் ரொட்டி துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு வேகவைக்க வேண்டும்
Image Source: istock
இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் சூப்பரான வெள்ளரிக்காய் ரொட்டி ரெடி. இதை அப்படியே சாப்பிடலாம் (அ) சாம்பார், சட்னியை தொட்டும் சாப்பிட செய்யலாம்
Image Source: istock
Thanks For Reading!