Aug 20, 2024
வெள்ளை பூசணிக்காய் கோடைக்காலத்தில் கிடைக்கும் காய்கறிகளுள் ஒன்றாகும். இதில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, துத்தநாகம், கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை ஜூஸ் போட்டு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இப்பதிவில் காண்போம்.
Image Source: istock
வெள்ளை பூசணி ஜூஸை தினமும் குடித்து வந்தால் இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் வளர்ச்சி அதிகரிக்க செய்து வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது. வயிற்றில் ஏற்படும் வாயு பிரச்சனை, அஜீரணம் போன்ற தொந்தரவுகளும் குணமாகும்.
Image Source: istock
கோடைக்காலத்தில் கிடைக்கும் இந்த வெள்ளை பூசணியை ஜூஸ் செய்து தினமும் குடித்து வருவதனால் உடல் எப்போழுதும் நீரேற்றமாக இருக்க உதவும், உடல் உஷ்ணம் நீக்கி குளிர்ச்சியினை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
Image Source: istock
வெள்ளை பூசணிக்காயில் அதிகளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுக்கள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை தினமும் ஜூஸ் செய்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இதன் மூலம் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுத்துவதில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள உதவுகிறது.
Image Source: istock
தினமும் நாம் இந்த ஜூஸை குடித்து வருவதன் மூலம் இதிலிருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுக்கள் நமது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது. தவறான உணவு முறை மற்றும் தற்போதைய மோசமான வாழ்க்கை முறை காரணமாகவே இந்த நச்சுக்கள் உடலில் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.
Image Source: istock
வெள்ளை பூசணியில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளது, இதனை உடல் எடையை குறைக்க நினைப்போர் தினந்தோறும் இதனை சாறு எடுத்து குடித்து வந்தால் அதிலிருக்கும் நீர்ச்சத்து வயிற்றை நிறைவாக வெகுநேரம் வைத்து கொள்கிறது. இதனால் அவ்வப்போது சாப்பிடுவதை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
Image Source: pexels-com
இந்த பூசணி ஜூஸை குடித்து வருவதன் மூலம் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் இதனால் பி.சி.ஓ.எஸ். மற்றும் நீரிழிவு நோய் பாதிப்புகளும் கட்டுப்பாட்டில் வைக்கும்.
Image Source: istock
பூசணிக்காய் சாற்றை குடிப்பதால் உடலுக்கு மட்டுமின்றி சரும ஆரோக்கியம் மற்றும் கூந்தல் வளர்ச்சி உள்ளிட்டவைக்கும் பல்வேறு நன்மைகளை பயக்கிறது. கூந்தல் வலுவாக மற்றும் அடர்த்தியாக வளரவும் இது ஊக்குவிக்கிறது.
Image Source: istock
இந்த காயை சமைத்து சாப்பிட முடியவில்லை என்றாலும், ஜூஸ் போட்டு குடித்து வந்தால் இதிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகளை நம்மால் பெற முடியும். எனினும், ஏதேனும், ஆபத்தான நோய்கள், நாள்பட்ட நோய்கள் இருக்கும் நிலையில் மருத்துவ ஆலோசனை பெற்ற பின்னர் குடிப்பது நல்லது.
Image Source: istock
Thanks For Reading!