May 7, 2024
வேகமான வாசிப்பு என்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. அதாவது வாழ்க்கையின் எந்தவொரு விஷயத்தை விரைந்து குறுகிய காலத்திற்குள் கற்றுக் கொள்ளக்கூடிய திறமையை நம்மிடையே உண்டாக்குகிறது.
Image Source: istock
வேகமான வாசிப்பு என்பது மூளையில் நினைவாற்றலை உயர்மட்டத்தில் வைக்கிறது. மூளைக்கு தொடர்ச்சியாக பயிற்சி கொடுப்பதால் எந்தவொரு விஷயத்தையும் பார்த்தவுடன் தகவல்களை விரைவாக உள்வாங்க முடியும்.
Image Source: pexels-com
வேகமாக வாசிக்கும் பழக்கம் எந்தளவுக்கு உள்ளதோ அதே அளவு கவனம் சிதறாமலும் இருக்கும். படிக்கும்போது வேறு சிந்தனை தோன்றும் என நினைத்தால் வேகமாக படிக்கலாம்.
Image Source: pexels-com
வேகமான வாசிப்பு புதிய விஷயங்களை விரைவாக கற்றுக்கொள்ள உதவுவதோடு நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது. இது போட்டித் தேர்வுகள், வினாடி வினா போன்ற போட்டிகளின் போது மிக எளிதாக நாம் வெற்றி பெற உதவுகிறது.
Image Source: pexels-com
வேகமான வாசிப்பு மனதில் இருக்கும் தவறான எண்ணங்கள் மற்றும் கவலைகளை நீக்குகிறது. இதனை ஒரு வகை தியானம் என்று கூட சொல்லலாம். அப்படி செய்வதால் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.
Image Source: pexels-com
வேகமாக படிக்கும்போது வாசிப்பு மீதான ஆர்வம் அதிகரிக்கும். மேலும் உங்களை மற்றவர்கள் அறிவார்ந்தவர்களாக பார்க்கும்போது உங்களின் வாசிப்பு பழக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.
Image Source: pexels-com
வேகமான வாசிப்பு குறுகிய காலத்திலேயே பலதுறை சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ளும் பழக்கமாக விரிவடைகிறது. இதனால் உங்கள் திறமைகளின் எல்லையானது விரிவடைகிறது. நீங்கள் எந்த துறையை பற்றி அதிகம் படிக்கிறீர்களோ அதில் பிரகாசிக்க வாய்ப்புண்டு.
Image Source: pexels-com
பழக பழக தான் வாசிப்பு வேகம் என்பது இருக்கும் என்பதால் ஒருபோதும் அதனை கைவிட வேண்டாம். இதில் டிஜிட்டல் வடிவிலான பிரதிகளை கூட நீங்கள் படிக்கலாம்.
Image Source: istock
வாசிக்கும் பழக்கம் மனதுக்கும், மூளைக்கும் ஒருவகை பயிற்சியாகும். இது தொழில் ரீதியாக உங்கள் திறமைகளை மேம்படுத்துகிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!