Jul 30, 2024
By: Nivethaநம்முள் பலருக்கு காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்க வேண்டும், சாப்பிட்டவுடன் ஒரு டீ அல்லது காபி குடிக்க வேண்டும் என்றும், புகை பிடிக்க வேண்டும் என்றும் பல்வேறு தீய பழக்கங்கள் இருக்கும். இது அனைத்தும் தீய பழக்கங்கள் என்று தெரிந்தும் நம்மால் அதிலிருந்து வெளிவர முடிவதில்லை.
Image Source: istock
இது போன்ற மனிதர்கள் தனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருப்பதால் இந்த பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டேன் என்று சொல்லி நாம் கேட்டிருப்போம். பிரச்சனை முடிந்தவுடன் இந்த தீய பழக்கங்களை கைவிட வேண்டும், ஆனால் அப்படி யாரும் செய்வதில்லை. இதனால் உடல் மட்டுமின்றி மனத்தின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
Image Source: istock
தீய பழக்கங்களை அடித்தனமாக அணுகாமல் அறிவுப்பூர்வமாக அணுகினாலே அதிலிருந்து வெளியில் வந்து விட முடியும். நல்ல பழக்கங்களை மட்டும் எடுத்துக்கொண்டு கெட்ட பழக்கங்களை கைவிட மனதிற்குள் ஆழமான ஓர் எண்ணத்தினை உருவாக்கும் என்று கூறுகிறார்கள்.
Image Source: istock
ஒரு பெண் துருக்கி தேசத்தில் திருமண வாழ்க்கையினை துவங்குகிறாள், ஆனால் அது அவள் எதிர்பார்த்த வாழ்க்கையாக இல்லை என்னும் பட்சத்தில், புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகிறாள். இதனால் அவளது குடும்பம் மற்றும் குழந்தைகள் அவளை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறார்கள்.
Image Source: istock
ஒருநாள் திடீரென அவளுக்கு ஓர் ஞான உதயம் பிறக்கிறது, தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று யோசிக்க துவங்கி, பின்னர் அந்த பழக்கத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தற்போது நன்றாக வாழ்ந்து வருகிறாள்.
Image Source: istock
தீய பழக்கம் பழக ஆயிரம் காரணம் சொல்லலாம், ஆனால் ஒரு பிரச்சனைக்கு இன்னொரு பிரச்சனை நிச்சயம் தீர்வாகாது என்று தோன்றியது. அதனால் தான் தீய பழக்கங்களை கைவிட்டேன் என்று அந்த பெண்மணி தன்னம்பிக்கையாக கூறியுள்ளார். ஒருவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் முயற்சி எடுக்கும் பட்சத்தில் வெற்றி நிச்சயம்.
Image Source: istock
எப்பொழுது நல்ல பழக்கங்களுக்கு எப்போது ஒரு மனிதன் தனது வாழ்க்கை முறையில் முக்கியத்துவம் கொடுக்கிறானோ, அப்போது அவனிடம் இருக்கும் இந்த தீய பழக்கங்கள் தானாகவே அவனை விட்டு வெளியேற துவங்கும் என்று கூறுகிறார்கள்.
Image Source: istock
பிரச்சனைகள் நம்முள் யாருக்கு தான் இல்லை, ஆனால் அதற்காக பிரச்சனையை விட்டு ஓட நினைத்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகி விட கூடாது. அது பிரச்சனைக்கு தீர்வல்ல, ஆரம்பம். மேலும் இது மூளையின் செயல்பாட்டினையும், உடல் ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.
Image Source: istock
ஒருவன் பிரச்சனையில் இருக்கும் பொழுது அவனது மனம் ஈரமான சிமெண்டிற்கு சமம் என்கிறார்கள், அதில் தீய பழக்கங்கள் அடி எடுத்து வைத்தால் மறையாத சுவடாக ஆகிடும். எனவே, மனதை நல்ல எண்ணங்கள் மற்றும் நற்செயல்களால் இறுக செய்து வேண்டாத பழக்கங்களை விவேகமாக செயல்பட்டு விரட்டினால் வெற்றி நிச்சயம்.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!