Jun 15, 2024
By: mukesh Mசாதி, மதம், மொழி, கலாச்சாரம் என அனைத்தையும் கடந்தது தான் காதல். இந்நிலையில், உங்கள் மாநிலத்தை விட்டு வேற்று மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து - திருமணம் செய்வதன் நன்மை - தீமை பற்றி இங்கு காணலாம்.
Image Source: unsplash-com
மாற்று மாநிலத்தில் வசிக்கும் உங்கள் காதலியை சந்திக்க விரும்பினால், நீங்கள் அடிக்கடி பயணங்கள்மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த பயணங்கள் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியாகவும், ஒரு சிலருக்கும் அலைச்சலாகவும் இருக்கும்.
Image Source: unsplash-com
மொழி கடந்து இணையும் இந்த காதலில், மாற்று மொழி பேசும் பெண்ணை காதலிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும். அந்த வகையில் உங்கள் காதலி வழியே கூடுதல் மொழியை கற்கும் வாய்ப்பும் கிடைக்கும்!
Image Source: unsplash-com
ஆய்வுகள் படி நெடுந்தொலைவில் இருந்து காதல் செய்யும் ஜோடிகளின் பிணைப்பு நெருக்கமாக இருப்பதாகவும், நெடு நாட்களுக்கு நீடிக்கும் ஒரு உறவாகவும் இருக்கும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: unsplash-com
நெடுந்தொலைவில் இருக்கும் உங்கள் காதலியை கைப்பேசி, இணையம் வழியே தொடர்புக்கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருக்கும் நிலையிலும், அவரை விரும்பும் நேரத்தில் நேரடியாக சந்திக்க முடியாது!
Image Source: unsplash-com
மாற்று மாநில பெண்ணை காதலிப்பது என்பது மாற்று மொழியை பேசும் அல்லது மாற்று கலாச்சாரத்தை கடைப்பிடிக்கும் பெண்ணை காதலிப்பது என்பதாகும். இந்நிலையில் இந்த இணைவு, இரு மாநில கலாச்சாரங்களின் ஒன்றிணைக்கும் ஒரு வழி ஆகும்.
Image Source: pexes-com
இரு வேறு கலாச்சாரத்தை பின்பற்றும் இந்த காதல் ஜோடிகள், கலாச்சார மாறுபாடுகள் காரணமாக கருத்து வேறுபாடு பிரச்சனைகளையும் சந்திக்க கூடும்.
Image Source: unsplash-com
மாற்று மாநில பெண்ணை காதலித்து திருமணம் செய்யும் போது, குறித்த அந்த மாநிலத்தின் கலாச்சாரத்தை நீங்கள் அறிவதோடு, அவர்களின் உணவு வகைகளையும் நீங்கள் சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
Image Source: unsplash-com
இரு வேறு மாநிலங்கள் என தொலைவில் வசிக்கும் இந்த காதல் ஜோடிகள், திருமணத்திற்கு பின் தங்கள் குடும்ப நபர்களுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை இழக்கின்றனர். இது, மறைமுகமாக உறவினர்கள் எண்ணிக்கை குறைவதற்கும் வழிவகுக்கும்!
Image Source: unsplash-com
Thanks For Reading!