Jun 13, 2024
BY: S Anojவேலூர் மக்கள் சாலையோர கடைகளில் விரும்பி சாப்பிடும் உணவுகளில் மீன் சேமியாவும் ஒன்றாகும். இந்த உணவை குக் வித் கோமாளியில் விஜே பிரியங்காவும் செய்து அசத்தினார். அதன் எளிய செய்முறையை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
நீளமாக நறுக்கிய வெங்காயம் - 1; வர மிளகாய் - 3; இஞ்சி - 2 இன்ச்; பூண்டு - பற்கள்; சோள மாவு - 1 டீஸ்பூன்; கொத்தமல்லி - சிறிதளவு; எண்ணெய் - தேவையான அளவு
Image Source: istock
மீன் - 3 துண்டுகள்; ப.மிளகாய் - 1; நறுக்கிய தக்காளி - 1; முட்டை - 1; இடியாப்பம் - 2; கறிவேப்பிலை - சிறிதளவு; உப்பு - தேவைக்கேற்ப
Image Source: istock
முதலில் ஒரு பவுலில் வர மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு பற்கள் ஒன்றாக சேர்க்கவும். அதில் சுடு தண்ணீரை ஊற்றி ஊறவைக்க வேண்டும். பின் நீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்
Image Source: istock
பிறகு, ஒரு தட்டில் 2 டீஸ்பூன் அரைத்த மசாலா கலவை மற்றும் சோள மாவை ஒன்றாக சேர்க்க வேண்டும். அவற்றை சுத்தம் செய்த மீனில் தடவ வேண்டும்
Image Source: istock
இப்போது, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் மீனை பொரித்து தனியாக வைத்துவிடவும்
Image Source: pexels-com
பிறகு, கடாயில் எண்ணெய் தடவி காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாய், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். கலவையை நன்றாக கொத்திவிட்டு, உப்பு, 2 டீஸ்பூன் அரைத்த மசாலா மற்றும் ஒரு முட்டையை உடைத்து உற்றி நன்றாக கிளறிவிடவும்
Image Source: pexels-com
தொடர்ந்து, இடியாப்பத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்க வேண்டும். பின், பொரித்த மீனில் முள் இல்லாத சதைப் பகுதியை மட்டும் சேர்த்து நன்றாக கொத்த வேண்டும்
Image Source: istock
இறுதியாக, கொத்தமல்லியை தூவினால் சுவையான வேலூர் பேமஸ் மீன் சேமியா ரெடி. இதை வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்
Image Source: instagram-com/vellore__foodie
Thanks For Reading!