Jun 8, 2024
By: Anojஉங்கள் உடலில் நீர்ச்சத்து குறைபாடு இருப்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதிக வியர்வை, தலைவலி, தலைசுற்றல், மயக்கம், அதீத தாகம், வாய் வறண்டு போவது போன்றவை இருந்தால் உடனடியாக உடலை நீரேற்றம் செய்ய வேண்டும்.
Image Source: istock
உங்களுடைய பயணங்களில் எப்போதும் உடன் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொள்ளுங்கள். உடல் செயல்பாட்டிலும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் என்பதால் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்.
Image Source: pexels-com
எப்போதும் வீட்டை விட்டு வெளியேறும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். இது உடலின் மந்த நிலையை போக்கி மன ஆரோக்கியத்தை உண்டாக்கும்.
Image Source: pexels-com
வெள்ளரி, தர்பூசணி, ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற நீர் நிறைந்த பழங்களை எடுக்கலாம். முள்ளங்கி, தக்காளி, குடைமிளகாய் போன்ற காய்கறிகளும் நீர் நிறைந்தவை. உடலுக்குத் தேவையான நீரில் 20% இதில் கிடைக்கிறது.
Image Source: istock
திரவம் தானே என நினைக்காமல் காஃபி, டீ, சோடா, மதுபானங்கள் போன்றவற்றை குடிக்கக்கூடாது. இது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை உண்டாக்கி நம்மை மந்தமாக செயல்பட வைக்கும்.
Image Source: istock
ஒவ்வொரு குறிப்பிட்ட நேரத்துக்கும் நினைவூட்டல்கள் வைத்து தண்ணீர் குடிக்கலாம். இதற்கென பிரத்யேக செயலிகள் எல்லாம் தற்போது வந்து விட்டது.
Image Source: istock
நீர் குடிப்பதில் சிலருக்கு அசௌகரியம் உண்டாகலாம். அவர்கள் இளநீர், தேங்காய் தண்ணீர், எலக்ட்ரோலைட் பானங்களை தேர்வு செய்து குடிக்கலாம்.
Image Source: istock
அதிக வியர்வை நீரிழப்பை உண்டாக்கும் என்பதால் பொருத்தமான ஆடைகளை தேர்வு செய்யவும். சூரிய ஒளியை தடுக்கக்கூடிய, காற்று புகக்கூடிய ஆடைகள் அணிவது சிறந்தது.
Image Source: pexels-com
மதுவை காட்டிலும் மன அழுத்த்ததை தண்ணீர் போக்கி விடும். எந்தவித மதுபானமும் உடலில் நீரிழப்பை உண்டாக்கி நம்மை செயல்பட விடாமல் தடுக்கும். அதிலிருந்து மீள பல மணி நேரம் ஆகலாம் என்பதால் மதுபானங்களை தவிர்க்கவும்.
Image Source: istock
Thanks For Reading!