[ad_1] ‘வைட்டமின் ஏ’ குறைபாடு ஏற்படுவது ஏன்? இதன் அறிகுறிகள் என்ன?

Jun 5, 2024

‘வைட்டமின் ஏ’ குறைபாடு ஏற்படுவது ஏன்? இதன் அறிகுறிகள் என்ன?

mukesh M

வைட்டமின் ஏ குறைபாடு!

கண் பார்வை, சரும ஆரோக்கியம, நோய் எதிர்ப்பு சக்திக்கு அவசியமான ஒரு வைட்டமினாக இருக்கும் வைட்டமின் ஏ சத்து நம் உடலில் குறையும் போது உண்டாகும் மாற்றங்கள் என்ன? பாதிப்புகள் என்ன? என்று இங்கு காணலாம்!

Image Source: istock

காரணங்கள் என்ன?

மதுபான நுகர்வு, வயிற்று போக்கு உள்ளிட்ட பிரச்சனைகளின் போது உண்டாகும் நீரிழப்பு, ஆரோக்கியமற்ற உணவு வழக்கம், நாள்பட்ட நோய் பிரச்சனைகள் இந்த வைட்டமின் ஏ தட்டுப்பாட்டுக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.

Image Source: istock

அறிகுறிகள் என்ன?

நம் கண்களை சுற்றி சிறு கொப்புளங்கள் உண்டாவது, காயங்கள் - வீக்கம் உண்டாவது இந்த வைட்டமின் ஏ குறைப்பாட்டின் மிக முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Image Source: istock

விழிகளில் வெள்ளை திட்டுகள்!

விழிகளில் Bitot spots எனும் வெள்ளை நிற திட்டுங்கள் உண்டாவது, சுருக்கங்கள் ஏற்படுவது இந்த வைட்டமின் ஏ தட்டுப்பாட்டின் மிக முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Image Source: istock

கண்புரை!

கருவிழியின் மீது வெள்ளை நிற மேகம் போல் படிந்து கண்பார்வையை பாதிப்பது இந்த வைட்டமின் ஏ குறைப்பாட்டின் மிக முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Image Source: istock

கண் இமைகளின் வறட்சி!

கண் இமை மற்றும் கண்களை சுற்றியுள்ள சரும பகுதி வறண்ட நிலையில் காட்சியளிப்பது இந்த வைட்டமின் ஏ குறைப்பாட்டின் மிக முக்கியமான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Image Source: istock

மாலை கண் நோய்!

இருட்டில் பார்வை இழப்பது போன்ற மாலை கண் நோயும் இந்த வைட்டமின் ஏ குறைபாட்டின் ஒரு முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Image Source: istock

தடுக்க வழி உண்டா?

வைட்டமின் ஏ குறைபாட்டின் அறிகுறிகள் மற்றும் வைட்டமின் குறைப்பாட்டால் உண்டாகும் ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்க ஆரோக்கிய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை கடைப்பிடிப்பது அவசியம்.

Image Source: istock

எச்சரிக்கையாக இருங்கள்!

வைட்டமின் ஏ குறைபாடு ஆனது பெண்களின் மலட்டுத்தன்மை மற்றும் குழந்தையின்மைக்கும் வழிவகுக்கும் என்பதால்; இப்பிரச்சனையின் அறிகுறி கண்டவுடன் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது!

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: கண்களை சுற்றி பாதிக்கும் எக்சிமா? எவ்வாறு குணப்படுத்தலாம்?

[ad_2]