[ad_1] வைட்டமின் டி குறைபாடும் - சர்க்கரை நோயும்; என்ன தொடர்பு?

Aug 7, 2024

வைட்டமின் டி குறைபாடும் - சர்க்கரை நோயும்; என்ன தொடர்பு?

mukesh M

நீரிழிவும் - வைட்டமின் டி குறைபாடும்!

நம் உடலில் உண்டாகும் வைட்டமின் டி குறைபாடு ஆனது நீரிழிவு பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமையலாம் என பரவலாக நம்பப்படும் நிலையில், இதன் உண்மை நிலை பற்றி இங்கு காணலாம்!

Image Source: istock

நிபுணர்கள் கூறுவது என்ன?

நிபுணர்கள் கூற்றுப்படி இந்த வைட்டமின் டி அளவு குறைபாடு ஆனது, இன்சுலின் உணர்திறனை பாதிக்க கூடும். இதன் விளைவாக இரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் உண்டாக கூடும்!

Image Source: pexels-com

யாரை அதிகம் பாதிக்கிறது?

ஆஸ்திரேலிய நாட்டு ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் 45-வயதுக்கு மேல் உள்ள (வைட்டமின் டி தட்டுப்பாடு உள்ள) நபர்களையே இந்த நீரிழிவு பிரச்சனை அதிகம் பாதிக்கிறது.

Image Source: istock

நீரிழிவு மட்டும் அல்ல!

இந்த அத்தியாவசிய வைட்டமினின் குறைபாடு ஆனது வகை - 2 நீரிழிவு பிரச்சனையின் வாய்ப்புகளை அதிகரிப்பதோடு, நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் கால் புண் பிரச்சனைகளையும் தீவிரப்படுத்துகிறது!

Image Source: istock

உடல் மெலிவுறுதல்!

வைட்டமின் டி குறைபாடு ஆனது தசைகள் மற்றும் எலும்புகளின் வலிமை இழப்புக்கு வழிவகுக்கிறது. அந்த வகையில் இந்த வைட்டமின் டி குறைபாடு ஆனது நீரிழவுடன் கூடிய உடல் மெலிவுறுதல் பிரச்சனைக்கும் காரணமாகிறது!

Image Source: istock

ரிக்கெட்ஸ் அபாயம்!

ரிக்கெட்ஸ் என்பது எலும்பு பலவீனம் தொடர்பான ஒரு நோய் ஆகும். வைட்டமின் டி குறைப்பாட்டால் உண்டாகும் இந்த நோய் பெரும்பாலும் குழந்தைகளை குறி வைக்கிறது!

Image Source: istock

வைட்டமின் டி தட்டுப்பாட்டை எப்படி அறிவது?

தசை வலி - பிடிப்புகள், எலும்புகளில் (மூட்டுகளில்) வலி, தலை மற்றும் கால்களில் ஊசியால் குத்துவது போன்ற வலி உணர்வு போன்றவை இந்த வைட்டமின் டி குறைப்பாட்டின் அறிகுறிகள் ஆகும்.

Image Source: istock

தடுக்க வழி உண்டா?

வைட்டமின் டி குறைப்பாட்டால் உண்டாகும் இந்த பிரச்சனைகளை சமாளிக்க செறிவூட்டப்பட்ட பால், தானியங்கள், முட்டையின் மஞ்சள் கருக்கள், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி உள்ளிட்ட வைட்டமின் டி நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம்!

Image Source: istock

உணவு மட்டும் போதுமா?

வைட்டமின் டி குறைப்பாட்டை தவிர்க்க வைட்டமின் டி நிறைந்த உணவு வழக்கம் மட்டும் போதாது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம். நிபுணர்களின் வழிகாட்டுதல் படி ஆரோக்கிய வாழ்க்கை முறையுடன் நீரிழிவினை தவிர்த்திடுகங்கள்!

Image Source: istock

Thanks For Reading!

Next: மல்யுத்த நாயகி 'வினேஷ் போகத்' டயட் பிளான் பற்றி தெரியுமா?

[ad_2]