Jun 27, 2024
வைட்டமின்-டி என்பது நம் உடலுக்கு மிக முக்கியமான ஊட்டச்சத்து. இதில் குறைபாடு ஏற்பட்டால் எலும்பு-தசை வலி, புற்றுநோய், பலவீனம், குழந்தைகளுக்கு ஆஸ்துமா, வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த கூடும்.
Image Source: istock
சூரிய ஒளி மூலம் நமது உடலுக்கு வைட்டமின்-டி ஊட்டச்சத்து பெருமளவில் உறிஞ்சப்படுகிறது. அப்படியிருக்கையில் சூரிய ஒளி குறைவாகவுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் வீட்டிற்குள்ளேயே இருப்போருக்கு இந்த குறைபாடு ஏற்படும்.
Image Source: istock
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு வைட்டமின்-டி ஊட்டச்சத்தினை உற்பத்தி செய்யும் மரபணு பாதிக்கப்படுவதால் அவர்களுக்கும் இந்த குறைபாடு ஏற்படும்.
Image Source: pixabay
தாய்ப்பாலில் வைட்டமின்-டி குறைவாக இருக்கும், அதனால் தாய்ப்பால் மட்டும் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த குறைபாடு ஏற்படக்கூடும். இதனால் குழந்தைகளை இளம் வெயிலில் காண்பிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
Image Source: istock
கருமையாக உள்ளோர் சருமத்தில் மெலனின் என்னும் நிறமி இருக்கும். அது சூரிய ஒளி சருமத்தின் மீது வைட்டமின் டி உற்பத்தி செய்வதை தடுக்கிறது.
Image Source: pexels
ஏசி அறையிலேயே அதிகநேரம் இருப்போருக்கும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதே போல், வெளியில் செல்லும் பொழுது உடல் முழுவதும் ஆடைகளை கொண்டு மூடி சென்றாலும் குறைபாடு ஏற்படும்.
Image Source: pexels
உடல் பருமனாக உள்ளோருக்கு ரத்தத்தில் வைட்டமின்-டி குறைவாகவே இருக்குமாம். கிரோன் நோய், சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ், செலியாக் நோய் உள்ளிட்ட நோய் பாதிப்பு உள்ளோருக்கும் இந்த குறைபாடு ஏற்படும்.
Image Source: pixabay
வைட்டமின்-டியை பெற வேண்டுமெனில் சால்மன், மக்ரோல் போன்ற மீன் வகைகளை சாப்பிடலாம். சீஸ், காளான், முட்டையின் மஞ்சள் கரு, ஆரஞ்சு ஜூஸ், பால், சோயா, வெண்ணெய் போன்ற உணவுகளை சாப்பிடுங்கள்.
Image Source: pixabay
ஆரோக்கியமான உணவுகளை தவறாமல் சாப்பிட்டு வந்தால் இது போன்ற எவ்வித ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படாது என்பது மருத்துவர்களின் அறிவுரையாக கூறப்படுகிறது.
Image Source: Samayam Tamil
Thanks For Reading!