Jul 23, 2024
வைட்டமின் பி, எட்டு ஊட்டச்சத்துக்களின் குழு ஆகும். அவை செல் ஆரோக்கியத்தை காக்கவும், மூளை செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. வைட்டமின் பி குறைபாட்டை சரிசெய்யும் உணவுகள் பற்றி காணலாம்
Image Source: istock
முட்டையில் பி2, பி5, பி7 மற்றும் பி12 நிறைந்துள்ளது. அதனை தினசரி உணவில் சேர்ப்பது மூலம் உடலில் பல பிரச்சனைகளை சரிசெய்ய முடியும்
Image Source: istock
கொண்டைக்கடலை, பட்டாணி, பிளாக் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் பி1, பி2, பி3, பி5, பி6 மற்றும் பி9 உள்ளது. இவை வைட்டமின் பி குறைபாட்டை சரிசெய்வதோடு மெட்டபாலிசத்தை ஊக்குவிக்கக்கூடும்
Image Source: istock
அவகோடாவில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளது. வைட்டமின் சி, ஈ, கே மற்றும் பி6 உள்ளது. இதுதவிர, ஃபோலேட், மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய சத்துகளும் உள்ளன
Image Source: istock
தினசரி உணவு முறையில் பிரவுன் ரைஸ் சேர்த்துகொள்ளலாம். அதில் வைட்டமின் பி மட்டுமின்றி நார்ச்சத்தும் அதிகமாகவே உள்ளது. இதன் மூலம் செரிமான சிக்கல்கள் முற்றிலுமாக நீங்கக்கூடும்
Image Source: istock
பாதாம், சூரியகாந்தி விதை மற்றும் ஆளி விதைகளில் பி1, பி2, பி3, பி6 மற்றும் பி9 நிறைந்துள்ளது. இவற்றை பசி எடுக்கையில் ஸ்நாக்ஸ் வடிவிலும் தினமும் சாப்பிட செய்யலாம்
Image Source: pexels-com
கீரை மற்றும் ப்ரோக்கோலியில் வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி9 நிறைந்துள்ளது. இவை வைட்டமின் பி குறைபாட்டை எதிர்த்து போராட பயனுள்ள தீர்வாகும்
Image Source: istock
சால்மன், டிரௌட், ஷெல்ஃபிஷ் போன்ற கடல் உணவுகளில் வைட்டமின் பி2, பி3, பி6, பி12 ஆகியவை உள்ளன. இவை வைட்டமின் பி குறைபாடு ஏற்படாமல் பாதுகாக்கக்கூடும்
Image Source: istock
சீஸ், பால், தயிர் போன்ற தயாரிப்புகளில் வைட்டமின் பி2 மற்றும் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது. இவை ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகும்
Image Source: istock
Thanks For Reading!