[ad_1] 'வைட்டமின் பி12' குறைபாட்டால் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

May 29, 2024

'வைட்டமின் பி12' குறைபாட்டால் பெண்களின் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

Anoj

வைட்டமின் பி12 அறிகுறிகள்

உடலின் சீரான இயக்கத்திற்கு வைட்டமின் பி12 மிகவும் அவசியமானது. இது உடல் ரீதியாக பல பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இந்தப் பதிவில், பெண்களின் உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டை உணர்த்தும் அறிகுறிகளை பற்றி காணலாம்

Image Source: istock

நிற மாற்றம்

வைட்டமின் B12 குறைபாடு இரும்புச்சத்து குறைபாட்டிற்கு வழிவகுத்து அனீமியா பாதிப்பை உண்டாக்கக்கூடும். உடலில் அதிகளவு பிலிரூபின் மற்றும் குறைந்த அளவு ரத்த சிவப்பணுக்கள் காரணமாக சருமம் வெளிர் நிறமாகவும், கண்கள் மஞ்சள் நிறமாகவும் மாறக்கூடும்

Image Source: istock

தலைவலி

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஒற்றை தலைவலிக்கு வைட்டமின் பி12 குறைபாடு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதற்கு ஏற்ற மருந்துகளை எடுத்துகொள்வது அவசியம்

Image Source: pexels-com

மனக்கவலை

உடலில் வைட்டமின் பி12 குறைவது, மனக்கவலையை உண்டாக்க செய்யலாம். நீங்கள் வழக்கத்திற்கு மாறாக கவலையாக உணர்ந்தால், வைட்டமின் பி12 நுகர்வை அதிகரிப்பது அவசியமாகும்

Image Source: istock

சோர்வு

உடலில் வைட்டமின் B12 குறைவாக இருக்கும் பட்சத்தில், அதீத சோர்வை உணர செய்வீர்கள். அது ரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தியை குறைத்து ஆக்ஸிஜன் விநியோகத்தை குறைக்க செய்யலாம்

Image Source: pexels-com

இரைப்பை குடல் பிரச்சினை

வைட்டமின் B12 குறைபாடு, உடலில் குமட்டல், மலச்சிக்கல், வீக்கம், வாயு மற்றும் வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும். இந்த அறிகுறிகளை தொடர்ச்சியாக கவனிக்கும் பட்சத்தில், மருத்துவரை சந்திப்பது சிறந்த முடிவாகும்

Image Source: istock

கவனம் செலுத்துவதில் சிரமம்

உடலில் வைட்டமின் B12 நுகர்வு குறைவாக இருப்பவர்கள், தங்கள் பணிகளை கவனம் செலுத்துவதில் சிரமத்தை சந்திக்கிறார்கள். இதன் காரணமாக, நன்கு தெரிந்த விஷயங்களை கூட மறக்க நேரிடுகிறது

Image Source: pexels-com

வாயில் வீக்கம்

வாயில் வீக்கம் அல்லது வலி உணர்ந்தால், அது உடலில் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்க செய்யலாம். ஆய்வின் படி, குளோசிடிஸ் மற்றும் ஸ்டோமாடிடிஸ் ஆகியவை பி12 குறைபாட்டின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாகும்.

Image Source: istock

தசைப்பிடிப்பு

தசைப்பிடிப்பு மற்றும் உடல் பலவீனமாக உணர்வதும் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகளாக இருக்கலாம். அது நரம்பு செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்

Image Source: istock

Thanks For Reading!

Next: ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள் வெந்நீரில் குளிப்பது சரியா?

[ad_2]