[ad_1] ஷாப்பிங் பிரியரா நீங்கள்? இதோ உலகின் மலிவு விலை சந்தைகளின் பட்டியல்!

Jul 30, 2024

ஷாப்பிங் பிரியரா நீங்கள்? இதோ உலகின் மலிவு விலை சந்தைகளின் பட்டியல்!

Pavithra, Samayam Tamil

மலிவு விலை ஷாப்பிங்

உலகைச் சுற்றிப் பார்க்க ஆசை இருக்கும் பலருக்கும் அதே அளவு ஆசை பல்வேறு நாடுகளில் ஷாப்பிங் செய்வதிலும் இருக்கும். கவலை வேண்டாம்! இதோ ஷாப்பிங் செய்ய மிகவும் மலிவான இடங்கள்.

Image Source: pexels-com

டெல்லி, இந்தியா

இந்தியா ஒரு அழகான நாடு என்பதோடு ஷாப்பிங் செய்வதற்கு மலிவான இடமும் கூட. 'சரோஜினி நகர்' மற்றும் 'ஜன்பத்' சந்தைகளில் ஆடைகள் முதல் மசாலா பொருட்கள் வரை மலிவான விலையில் பெறலாம்.

Image Source: unsplash-com

ஹோ சி மின் நகரம், வியட்நாம்

'பென் தன்' மற்றும் 'பின் டே' சந்தைகள் பட்ஜெட் ஷாப்பிங்கிற்கான மையமாக உள்ளது. இங்கு ஆடைகள் மற்றும் நினைவுப் பொருட்கள் என அனைத்தும் நியாயமான விலையில் கிடைக்கும்.

Image Source: unsplash-com

பாங்காக், தாய்லாந்து

தாய்லாந்தின் தலைநகரான பேங்காக், ஷாப்பிங் செய்பவர்களுக்கு சொர்க்கம். 'சட்டுசக்' போன்ற இரவு சந்தைகள் முதல் ஷாப்பிங் மால்கள் வரை இங்கு எல்லா இடங்களிலும் பட்ஜெட் ஷாப்பிங் செய்யலாம்.

Image Source: unsplash-com

லிஸ்பன், போர்ச்சுகள்

ஐரோப்பாவில் ஷாப்பிங் செய்வது பொதுவாக விலை உயர்ந்ததாக இருந்தாலும், லிஸ்பன் ஒரு விதிவிலக்கு. இங்கு உள்ள சந்தைகளில் கைவினைப் பொருட்கள் முதல் உணவுகள் வரை மலிவான விலையில் பெறலாம்.

Image Source: unsplash-com

ஈஸ்டான்புல், துருக்கி

சுவையான உணவு மற்றும் ஷாப்பிங் செய்ய ஏராளமான இடங்கள் கொண்ட ஈஸ்டான்புல்லில் 'கிராண்ட் பஜார்' போன்ற சந்தைகளில் கம்பளங்கள், நகைகள் போன்றவற்றை மலிவு விலையில் வாங்கலாம்.

Image Source: unsplash-com

மணிலா, பிலிப்பைன்ஸ்

பேரம் பேசுவதில் வல்லவர்களுக்குச் சிறந்த இடமான இங்கு ஆடைகள் முதல் மலிவு விலையில் எலக்ட்ரானிக் பொருட்கள் வரை பேச்சுத் திறன் கொண்டு குறைந்த விலையில் வாங்கலாம்.

Image Source: unsplash-com

லிமா, பெரு

லிமாவின் உள்ளூர் சந்தைகள் பெரு தயாரிப்புகளின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துகிறது. புதிய தயாரிப்புகள் முதல் கைவினைப் பொருட்கள் வரை இந்த சந்தைகளில் பட்ஜெட்டில் வாங்கலாம்.

Image Source: unsplash-com

புடாபெஸ்ட், ஹங்கேரி

புடாபெஸ்ட் சந்தைகள் பழைமை விரும்பிகளுக்கான புதையல் ஆகும். பழங்கால மரச்சாமான்கள் முதல் ரெட்ரோ ஆடைகள் வரை இந்த சந்தைகளில் மலிவு விலையில் கிடைக்கும்.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: 'ஸ்ரீநகர்' முதல் 'குமரி' வரை - NH 44-ல் இருக்கும் முக்கிய சுற்றுலா தலங்கள்

[ad_2]