Aug 9, 2024
உடுப்பி கோவிலில் பிரசாதமாக அளிக்கப்படும் ஷால்யானத்தை நம் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: instagram-com
அரிசி - 1 கப் | குங்குமப்பூ - 1 சிட்டிகை | பால் - 1½ கப் | கற்கண்டு - ¼ கப் | வெல்லம் - 100கி | நெய் - 3 ஸ்பூன்
Image Source: istock
ஏலக்காய் - 1 | முந்திரி பருப்பு - 20 | திராட்சை - 10 | கிராம்பு - 1 | தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் | ஏலக்காய் பொடி - ½ ஸ்பூன்
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட அரிசியை நன்கு அலசி சுத்தம் செய்து பின் மூழ்கும் அளவு தண்ணீரில் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் குக்கர் ஒன்றில் இந்த அரிசியை வடிகட்டி சேர்க்கவும். உடன் ½ கப் தண்ணீர், ஒரு கப் பால் மற்றும் குக்குமப்பூ சேர்த்து கலந்து 3 விசில் வர வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கி விசில் அடங்க காத்திருக்கவும்.
Image Source: istock
இதனிடையே அகன்ற பாத்திரம் ஒன்றில் 1 கப் அளவு தண்ணீருடன் கற்கண்டு மற்றும் வெல்லத்தை இடித்து சேர்த்து கலந்து பாகு நிலைக்கு தயார் செய்யவும்.
Image Source: istock
பின் இதனுடன் குக்கரில் வேக வைத்து எடுத்து அரிசியை நன்கு குழைத்து - சேர்த்து, அரை கூழ்ம நிலைக்கு வரும் வரை கிளறிக்கொண்டே இறுக்கவும். பின் அடுப்பை அணைத்து சிறிது நேரம் பாத்திரத்தை மூடி புழுங்க வைக்கவும்.
Image Source: istock
இதனிடையே கடாய் ஒன்றின் நெய்யுடன் ஏலக்காய், கிராம்பு, முந்திரி - திராட்சை, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். பின் இதனுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து தாளித்து எடுக்கவும்.
Image Source: istock
பின் இந்த தாளிப்பினை தாயாரக உள்ள ஷால்யானத்தில் சேர்த்து கலக்கவும். தொடர்ந்து இதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து கலந்துவிட சுவையான உடுப்பி பிரசாதம் ரெடி!
Image Source: istock
Thanks For Reading!