May 6, 2024
ஷீட் மாஸ்க் அழகு பராமரிப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உங்கள் முகத்தை உடனடியாக பொலிவாக மாற்ற இந்த ஷீட் ஃபேஸ் மாஸ்க்கை நாம் பயன்படுத்தி வரலாம். இந்த ஷீட் மாஸ்க் நிறைய ஃப்ளேவர்களில் கிடைக்கிறது.
Image Source: pexels-com
ஷீட் மாஸ்க்கில் உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமாகும். உங்களுக்கு எண்ணெய் சருமமாக இருந்தால் மெட்டிஃபையிங் மாஸ்க்கை நாம் பயன்படுத்தலாம். இப்படி ஒவ்வொரு சருமத்திற்கும் ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுங்கள்.
Image Source: istock
ஷீட் மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தைக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் அழுக்குகள் தேங்கி இருந்தால் மாஸ்க்கில் உள்ள நன்மைகள் சருமத்தில் ஊடுருவாது. எனவே மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு முன்பு க்ளீன்சர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.
Image Source: istock
ஷீட் மாஸ்க்கை உங்கள் முக அமைப்பிற்கு ஏற்றவாறு பொருத்த வேண்டும். உங்கள் முகத்திற்கு இரண்டாவது அடுக்கு போல அது அமைய வேண்டும். பேஸ் மாஸ்க் உங்கள் முகத்தோடு எவ்வளவு ஒட்டி இருக்கிறதோ அந்தளவுக்கு சருமம் நன்மைகளை உறிஞ்சும்.
Image Source: istock
இந்த ஷீட் ஃபேஸ் மாஸ்க்கை உங்கள் முகத்தில் அதிக நேரம் அப்படியே விடக் கூடாது. ஏனெனில் தோலில் இருந்து ஈரப்பதத்தை எல்லாம் உறிஞ்சி விடும். குறிப்பிட்ட நேரம் வரை வைத்திருந்து அகற்றி விடுங்கள்.
Image Source: istock
ஷீட் மாஸ்க்கை பயன்படுத்திய உடனே முகத்தைக் கழுவ வேண்டாம். உங்கள் சருமம் நன்மையை உறிஞ்ச காத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் முழுமையான நன்மை கிடைக்கும்.
Image Source: istock
அழுக்கு கைகளால் ஷீட் மாஸ்க்கை பயன்படுத்துவது பாக்டீரியாக்களை முகத்திற்கு கொண்டு போக வாய்ப்பு உள்ளது. எனவே மாஸ்க்கை பயன்படுத்துவதற்கு முன்பு கைகளையும் முகத்தையும் சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
Image Source: istock
ஷீட் மாஸ்க் உங்களுக்கு எல்லா நன்மைகளையும் வழங்காது. சருமத்தை நீரேற்றமாக வைக்க மாய்ஸ்சரைசரை அப்ளை செய்யுங்கள். இது சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது.
Image Source: istock
நிறைய பேர் இந்த ஷீட் மாஸ்க்கை அவர்கள் தங்கள் முகத்திற்கு தகுந்தாற் போல் வெட்டி பயன்படுத்துவார்கள். இதனால் ஷீட் மாஸ்க்கின் முழு நன்மைகளும் பெற முடியாமல் போய் விடும்.
Image Source: istock
Thanks For Reading!