Jul 18, 2024
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டனுக்கான பந்தையத்தில் ஹர்திக் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரது பெயரும் அடிப்பட்டு வரும் நிலையில், டி20 போட்டிகளில் இவர்கள் இதுவரை அணிக்கு அளித்த பங்களிப்பு என்னவென்று இங்கு காணலாம்!
Image Source: twitter-com
இந்திய கிரிக்கெட் அணிக்காக மொத்தம் 68 T20i போட்டிகளில் பங்கேற்றுள்ள SKY 2340 ரன்கள் குவித்துள்ளார். அதேநேரம் ஹர்திக் 100 போட்டிகளில் 1492 ரனகள் குவித்துள்ளார்!
Image Source: twitter-com
பேட்டிங் சராசரியை பொறுத்தவரையில் SKY-ன் சராசரி 43.33 என முன்னிலை வகிக்கிறார். ஹர்திக் 26.64 எனும் பேட்டிங் சராசரியுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதாவது, பேட்டிங் யுக்திகளை பொறுத்த வரையில் SKY முன்னிலை வகிக்கிறார்!
Image Source: twitter-com
பேட்டிங்கில் SKY-ன் பங்களிப்பு அதிகம் இருப்பினும், பந்துவீச்சில் இதுவரை அவர் இந்திய கிரிக்கெட் அணிக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கவில்லை. அதேநேரம் ஹர்திக் 25.48 எனும் சராசரியுடன், இந்தியாவின் சிறந்த பந்துவீச்சாளராகவும் உள்ளார்.
Image Source: twitter-com
இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக இருக்கும் ஹர்திக் இதற்கு முன்னதாக 16 முறை T20i போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். இதில் 10 போட்டிகளில் (65.62%) வெற்றி கண்டு, தனது தலைமை பொறுப்பை நிரூபித்துள்ளார்!
Image Source: twitter-com
இதேப்போன்று சூர்ய குமார் யாதவ், இதற்கு முன்னதாக 7 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியை வழிநடத்தி 5-ல் (71.42%) வெற்றி கண்டு தனது தலைமை பண்பை நிரூபித்துள்ளார்!
Image Source: twitter-com
கேப்டன்ஷிப் பொறுத்தவரையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் பொறுப்பில் இருந்ததோடு, IPL-ல் GT மற்றும் MI அணியின் கேப்டனாகவும் தனது திறமையை நிருபித்தவர் ஹர்திக். அந்த வகையில் SKY விட ஒரு படி முன் நிற்கிறார் ஹர்திக்!
Image Source: twitter-com
இறுதியாக நடைப்பெற்ற டி20 உலககோப்பை தொடரின் இறுதி போட்டியில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது போன்று பல்வேறு போட்டிகளில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தவர் ஹர்திக். SKY-ன் சம்பவங்கள் பெரிதாக இல்லை!
Image Source: twitter-com
Fitness நிலை - ஹர்திக் பாண்டியாவை ஒரு படி பின்னுக்கு தள்ளும் காரணம். பலமுறை காயங்கள் காரணமாக தொடரில் இருந்து விலகியிருந்தவர். SKY-க்கு இதுபோன்ற வரலாறு இல்லை என்பது அவரது பலமாக உள்ளது!
Image Source: pexels-com
Thanks For Reading!