[ad_1] ஹார்மோன்களை சீராக்கும் மஞ்சிஸ்டா மூலிகை.. இன்னும் பல நன்மைகள் இருக்கு!

Aug 12, 2024

ஹார்மோன்களை சீராக்கும் மஞ்சிஸ்டா மூலிகை.. இன்னும் பல நன்மைகள் இருக்கு!

Anoj

மஞ்சிஸ்டா மூலிகை

மஞ்சிஸ்டா மூலிகை, ஆயுர்வேத சிகிச்சையில் பழங்காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சப்ளிமெண்ட், எண்ணெய் மற்றும் பொடி வடிவில் கிடைக்க செய்கிறது. இதனால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்

Image Source: x-com

ரத்தத்தை சுத்தப்படுத்தும்

ரத்தத்தை சுத்தப்படுத்தும் பண்புக்காக மஞ்சிஸ்டா மூலிகை அறியப்படுகிறது. உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்

Image Source: istock

அழற்சி எதிர்ப்பு

இந்த மூலிகையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. ஆர்த்ரிடிஸ் போன்ற நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கக்கூடும்

Image Source: istock

சரும ஆரோக்கியம்

சரும வயதாகுவதை மஞ்சிஸ்டா மூலிகை தடுக்கக்கூடும். அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட், முகத்தில் கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கக்கூடும். மேலும், முகப்பரு, தோல் அழற்சி போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்க உதவக்கூடும்

Image Source: pexels-com

சுவாச பிரச்சனையை போக்கும்

இந்த மூலிகை சளி, தொண்டைப்புண் மற்றும் இருமல் அறிகுறிகளை போக்கக்கூடும். ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது

Image Source: istock

ஹார்மோன் சமநிலையின்மை

மஞ்சிஸ்டா மூலிகையில் Adaptogenic பண்புகள் இருப்பதால், உடலில் உள்ள ஹார்மோன் அளவை இயற்கையாகவே சமநிலைப்படுத்தக்கூடும். மாதவிடாய் சமயத்தில் ஹார்மோன் சமநிலையின்மை சந்திக்கும் பெண்களுக்கு பெரும் உதவியாக இருக்கக்கூடும்

Image Source: istock

எதிர்ப்பு சக்தி

உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க மஞ்சிஸ்டா மூலிகை உதவக்கூடும். அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், நோய்த்தொற்றுகளை எதிர்த்து போராடி விரைவாக மீண்டு வரவும் உதவக்கூடும்

Image Source: istock

வயிற்று அசெளகரியம் நீங்கும்

மஞ்சிஸ்டா மூலிகை, உணவு குழாயில் வாயு ஏற்படுவதை குறைக்கக்கூடும். இதனால், வயிறு உப்புசம், வாயு மற்றும் மலச்சிக்கல் அபாயம் குறைய செய்கிறது. உடல் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுவதையும் இந்த மூலிகை மேம்படுத்த செய்கிறது

Image Source: istock

எப்படி சாப்பிடுவது?

அரை டீஸ்பூன் மஞ்சிஸ்டா மூலிகை பொடியை, வெதுவெதுப்பான நீரில் கலந்து ஒரு நாளைக்கு 2 முறை குடிக்க செய்யலாம். கசப்பான சுவையை கொண்டிருப்பதால் கொஞ்சம் தேன் சேர்த்துக்கொள்ளலாம்.

Image Source: istock

Thanks For Reading!

Next: அரிசி மாவு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்

[ad_2]